ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 2 வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.
மெல்போர்ன்:
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் கடந்த 26 ம் தேதி தொடங்கியது. முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் டிம் பெய்ன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.அதனை தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 195 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இந்திய அணியில் அதிகபட்சமாக பும்ரா 4 விக்கெட்களையும், அஸ்வின் 3 விக்கெட்களையும் கைப்பற்றி இருந்தனர்.
அதன் பிறகு முதல் இன்னிங்சை ஆடிய இந்தியா அணி 326 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.அதிகபட்சமாக கேப்டன் ரஹானே 112 ரன்களும், ஜடேஜா 57 ரன்களும் பெற்று இருந்தனர்.
ஆஸ்திரேலியா அணி சார்பில் ஸ்டார்க், நாதன் லயன் தலா 3 விக்கெட்டுகளும், கம்மின்ஸ் 2 விக்கெட்டுகளும், ஹாசல்வுட் ஒரு விக்கெட்டும் கைப்பற்றி இருந்தனர்.
Read more – சென்னையில் ஹோட்டல், கிளப்களில் புத்தாண்டு கொண்டாட தடை : போலீஸ் கமிஷனர் அறிவிப்பு
2 வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா அணி 99 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்து தடுமாறியது.அடுத்து உள்ளே வந்த இளம் வீரரான கிரீன் மற்றும் கம்மின்ஸ் ஜோடி பொறுப்புடன் விளையாடி இந்திய அணியின் பந்துவீச்சாளர்களை சோதித்தனர். பும்ரா வீசிய 83 வது ஓவரில் கம்மின்ஸ்(22 ரன்கள், 103 பந்துகள் ) அகர்வாலிடம் கேட்ச் கொடுத்து வெளியேற, அடுத்து சிராஜ் பந்தில் கிரீன்னும் 45 ரன்களின் நடையைக்கட்டினார். அதனை தொடர்ந்து இந்திய அணியின் சிறந்த பந்துவீச்சால் மேலும் 2 விக்கெட்கள் சரிய, ஆஸ்திரேலியா அணி 200 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இந்திய அணியில் சிராஜ் 3 விக்கெட்களும், அஸ்வின், ஜடேஜா மற்றும் பும்ரா தலா 2 விக்கெட்களும், உமேஷ் யாதவ் 1 விக்கெட்டும் கைப்பற்றி இருந்தார்.
70 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 16 ஓவர்களிலேயே 2 விக்கெட் இழப்பிற்கு இலக்கை எட்டியது. சுப்மன் கில் 35 ரன்களுடனும், கேப்டன் ரஹானே 27 ரன்களுடனும் அவுட் ஆகாமல் களத்தில் இருந்தனர்.
முதல் இன்னிங்சில் சதம் அடித்த இந்திய அணியின் கேப்டன் ரஹானேக்கு ஆட்டநாயகன் விருது அளிக்கப்பட்டது.
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 4 டெஸ்ட் கொண்ட போட்டி தொடரில் 1-1 என்ற முறையில் சமநிலையில் உள்ளது. 3 வது டெஸ்ட் போட்டி ஜனவரி 7ம் தேதி சிட்னியில் நடைபெற இருக்கிறது.