ஐபிஎல்: பஞ்சாப் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் கொல்கத்தா அணி, 2 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
அபுதாபியில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்று களமிறங்கிய கொல்கத்தா அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக தினேஷ் கார்த்திக் 58 ரன்களும், சுப்மன் கில் 57 ரன்களும் சேர்த்தனர்.
இலக்கை நோக்கி களமிறங்கிய பஞ்சாப் அணியில், தொடக்க வீரர்களான கேப்டன் கே.எல். ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் ஆகியோர் அணிக்கு சிறப்பான தொடக்கத்தை வழங்கினர். கொல்கத்தா அணி வீரர்களின் பந்துவீச்சை இந்த அணி நாலாபுறமும் சிதறடித்து ரன் குவிப்பில் ஈடுபட்டது. இந்த ஜோடி முதல் விக்கெட்டிற்கு 115 ரன்களை சேர்த்து அசத்தியது.
மயங்க் அகர்வால் 56 ரன்கள் எடுத்திருந்த போது, பிரசித் கிருஷ்ணா பந்து வீச்சில் வெளியேறினார். தொடர்ந்து களமிறங்கிய பூரான் 16 ரன்களிலும், ப்ரப்சிம்ரன் 4 ரன்களில் அடுத்தடுத்து வெளியேறினார்.
ஒரு கட்டத்தில் பஞ்சாப் அணி எளிதாக வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கே.எல். ராகுல் 74 ரன்களில் போல்டாகி வெளியேறினார். பிரதீப் கிருஷ்ணா 19வது ஓவரில் அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை எடுக்க ஆட்டம் விறுவிறுப்பாக மாறியது.
14 ரன்கள் தேவைப்பட்ட போது, கடைசி ஓவரை வீசிய நரைன் வெறும் 11 ரன்கள் மட்டும் கொடுக்க, 2 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா த்ரில் வெற்றி பெற்றது.