ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்கு எதிரான லீக் போட்டியில், கொல்கத்தா அணி 194 ரன்களை குவித்துள்ளது.
ஐபிஎல் தொடரின் 42வது லீக் போட்டி அபுதாபியில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் டெல்லி அணி கொல்கத்தா அணியை எதிர்கொண்டுள்ளது. நடப்பு தொடரில் இரு அணிகளும் தலா 10 போட்டிகள் விளையாடியுள்ளன. இதில், 7 வெற்றிகளுடன் கொல்கத்தா அணி புள்ளிப்பட்டியலில் இரண்டவது இடத்திலும், 5 வெற்றிகளுடன் கொல்கத்தா அணி 4வது இடத்திலும் உள்ளது.
பிளேஆப் சுற்றுக்கான வாய்ப்பை உறுதி செய்ய இன்றைய போட்டியில் வென்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் கொல்கத்தா அணி இன்று களமிறங்கியது. டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, சுப்மன் கில் மற்றும் நிதிஷ் ராணா கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரகளாக இறங்கினர்.
வந்த வேகத்தில் இரண்டு பவுண்டரிகளை விழாசிய கில், 9 ரன்களில் நோர்ட்ஜே பந்துவீச்சில் நடையை கட்டினார். அடுத்து வந்த திரிபாதியும் 13 ரன்களில், நோர்ட்ஜே பந்துவீச்சில் போல்டாக, முன்னாள் கேப்டன் தினேஷ் கார்த்திக் 3 ரன்களில் ரபாடா பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்தடுத்து வீழ்ந்த விக்கெட்டால், கொல்கத்தா அணி 42 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தவித்தது.
தொடர்ந்து, கடந்த சில போட்டிகளில் பங்கேற்காத நரைன் இன்று 4வது விக்கெட்டிற்கு களமிறங்கினார். ராணா உடன் சேர்ந்து அதிரடியாக ஆடிய நரைன் அணியை சரிவில் இருந்து மிட்டார். டெல்லி அணியின் பந்துவீச்சை சிக்சர் மற்றும் பவுண்டரி என நாலாபுறமும் விளாசிய ராணா – நரைன் இருவரும் அரைசதம் கடந்தனர். 32 பந்துகளில் 4 சிக்சர்கள், 6 பவுண்டரிகள் உட்பட 64 ரன்களை குவித்த நரைன், ரபாடா பந்துவீச்சில் வெளியேறினார். இறுதிவரை அவுட் ஆகாமல் இருந்த ராணா 53 பந்துகளில் 81 ரன்களை குவித்தார். இதையடுத்து, டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழப்பிற்கு 194 ரன்களை குவித்தது.