
சென்னை அணி மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இன்று மீண்டும் மோதவுள்ளதால் மேலும் பரபரப்பு கூடியுள்ளது.
நடப்பு ஐபில் தொடர் பெரும் எதிர்ப்பார்புகளுடன் ஐக்கிய அரசு எமிரேட்ஸில் நடைபெற்று வருகிறது.
அதிக ரசிகர்களைக் கொண்ட தொடராகவும், டிவியில் அதிக மக்கள் பார்க்கப்படும் நிகழ்ச்சியாகவும் நடப்பு ஐபிஎல்-2020 உருவெடுத்துள்ளது.
இந்நிலையில் அதிக ரசிகர்களைக் கொண்ட தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் எத்தனைமுறை தோற்றாலும் அது பிளே ஆப் சுற்றுக்குத்தகுதி பெற்றுவிடும் என்று நம்புவது அந்த அணியின் மீதுள்ள ரசிகர்களின் நம்பிக்கை மட்டுமல்ல தோனி எதேனும் மேஜிக் நிகழ்த்துவார் என்ற நம்பிக்கையும்தான்.
அவர் சமீபத்தில் அணி தோற்பதற்கு அளித்த விளக்கத்தில், இளைஞர்களிடம் ஸ்பார்க் இல்லை என்று தெரிவித்து பல முன்னாள் வீரர்களிடம் வாங்கிக் கட்டிக்கொண்டார்.
இந்நிலையில், இன்று இரவு 7:30மணிக்கு தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரோஹித் தலைமையிலான மும்பையுடன் மோதவுள்ளது.
இன்று சார்ஜாவின் நடைபெறுவம் 41 வது லீக் ஆட்டத்தில் ஜெயித்தால் மட்டும்தான் சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்குத் தகுதி பெறும் என்பதால் பரபரப்பு கூடியுள்ளது.
இவ்விரு அணிகளும் இதுவரை 29 முறை மோதியுள்ளன. இதில் மும்பை இந்தியன்ஸ் 17 முறை வெற்றிபெற்றியுள்ளது. சென்னை அணி 10 ஆட்டத்தில் விளையாடி 7 தோல்வி கண்டுள்ளது..3 ல் வெற்றியும் கண்டு புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
பார்ப்போம் தோனி சென்னை அணியைப் ப்ளே ஆப் சுற்றுக்கு கரைசேர்பார் என்று…




