அர்ஜென்டினா அணியின் நட்சத்திர வீரரான லியோனல் மெஸ்ஸி ,இவர் தான் ஆடும் கிளப் அணியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இந்த செய்தி அந்த நாட்டு கிளப் அணி மற்றும் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அர்ஜெண்ட்டினா நாட்டின் கால்பந்து அணியின் கேப்டனான லியோனல் மெஸ்ஸி கடந்த 20 ஆண்டுகளாக பார்சிலோனா கிளப் அணிக்காக விளையாடி வருகிறார். இப்போது நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் லீக் தொடரின் காலிறுதிப் போட்டியில் பேயன் முனிச் அணியுடன் 8-2 என்ற கோல் கணக்கில் பார்சிலோனா தோல்வியடைந்தது. இந்தத் தோல்வி மெஸ்ஸியை பெரிதும் பாதித்தது.
இதன்காரணமாக பார்சிலோனா அணி நிர்வாகத்துக்கு மெஸ்ஸி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அணியிலிருந்து விலக விரும்புவதாக தெரிவித்துள்ளார். 2007க்கு பின்பு சாம்பியன்ஸ் லீக் போட்டியில் பார்சிலோனா அணி இம்முறை படுதோல்வியை சந்தித்துள்ளது என்றும் அதற்கு பொறுப்பு ஏற்று தாம் அணியில் இருந்து விளக்கவுள்ளதாக அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதே மெஸ்ஸியின் ஆட்டத்தால்தான் பார்சிலோனா அணி 10 முறை சாம்பியன்ஸ் லீக் கோப்பையை வென்றதும் குறிப்பிடத்தக்கது.