மும்பை-டெல்லி ஐ.பி.எல். கிரிக்கெட்டில், டெல்லியில் உள்ள அருண்ஜெட்லி ஸ்டேடியத்தில் இன்றிரவு (செவ்வாய்க்கிழமை) நடக்கும் 16-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்சை எதிர்கொள்கிறது.
நடப்பு தொடரில் இன்னும் வெற்றிக் கணக்கை தொடங்காத அணிகள் இவை இரண்டும் தான். அதனால் முதல் வெற்றிக்காக கோதாவில் குதிக்கின்றன. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது . அதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளதுஅதன்படி டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.