பழனி முருகன் கோயிலில் இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் மொட்டையடித்து நேர்த்திக்கடன் செலுத்தினார். அவரைக் காண ஏராளமானோர் திரண்டனர்.

தமிழகத்தைச் சேர்ந்த இளம் வீரர் நடராஜன் இந்திய கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று சிறப்பாக விளையாடி வருகிறார். விளையாடிய சில நாட்களிலேயே ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ளார் நடராஜன். நடராஜன் பழனி முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வருகைதந்தார். மலை அடிவாரத்தில் மொட்டை அடித்து நேர்த்திக்கடன் செலுத்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் , ரோப் கார் மூலமாக மலைமீது சென்று சாமி தரிசனம் செய்ய கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்தது.

பழனி முருகன் கோயிலில் தைப்பூசத் திருவிழா நடைபெற்று வரும் நிலையில் கிரிக்கெட் வீரர் நடராஜன் வருகை தந்ததால் ஏராளமான பக்தர்கள் நடராஜனை சூழ்ந்துகொண்டு புகைப்படம் எடுக்க முற்பட்டனர். ரசிகர்களின் ஆர்வத்தால் திக்குமுக்காடிய நடராஜனை போலீசாரும் நண்பர்களும் பத்திரமாக அழைத்துச் சென்று காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர். தற்போது பழனி முருகனை தரிசனம் செய்ய வந்த இடத்தில் கிரிக்கெட் வீரர் நடராஜனை பார்த்து புகைப்படம் எடுத்துக் கொண்டது மகிழ்ச்சி அளிப்பதாக ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்




