ஜெர்மனியில் நடைபெற்ற உலக கோப்பை குத்துச்சண்டை போட்டியில் இந்தியா மூன்று தங்கம் உள்பட 9 பதக்கங்களை குவித்துள்ளது.
ஜெர்மனி:
உலக கோப்பை குத்துச்சண்டை போட்டி ஜெர்மனியில் கடந்த 16 ம் தேதி தொடங்கி நேற்று வரை நடைபெற்றது.இந்த குத்துச்சண்டை போட்டியில் இந்தியா மூன்று தங்கம் உள்பட 9 பதக்கங்களை குவித்துள்ளது.
முதலில் ஆண்களுக்கான 52 கிலோ எடை பிரிவில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்திய வீரர் அமித் பன்ஹாலை எதிர்த்து களம் காண இருந்த ஜெர்மனி வீரர் அர்ஜிஷ்டி டெர்டெர்யன் இறுதி நேரத்தில் காயம் காரணமாக விலகியதால் போட்டியின்றி அமித் பன்ஹாலுக்கு தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.அவரை தொடர்ந்து 91 கிலோ எடை பிரிவில் அரைஇறுதி போட்டியில் இந்திய வீரர் சதீஷ்குமார் 4-1 என்ற கணக்கில் பிரான்ஸ் வீரர் டாமிலி டினி மொயின்டை வென்று இறுதி போட்டிக்கு முன்னேறினார்.இறுதிப்போட்டியில் காயம் காரணமாக சதீஷ்குமார் விலக அவருக்கு வெள்ளிப்பதக்கம் மட்டுமே கிடைத்தது.
Read more – இந்தியாவில் வரும் ஜனவரி முதல் கொரோனா தடுப்பூசி: மத்திய அமைச்சர் ஹர்சவர்தன் தகவல்
அதன்பிறகு முகமது ஹூசாமுதீன் (57 கிலோ), கவுரவ் சோலங்கி (57 கிலோ) ஆகிய இந்திய வீரர்கள் வெண்கல பதக்கமும்,இவர்களை தொடர்ந்து இந்திய வீராங்கனை பூஜா ராணி (75 கிலோ) வெண்கல பதக்கத்தையும் தட்டி பறித்தனர்.