பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்-ன் ஆடவர் இறுதிப் போட்டியில், நோவக் ஜோகோவிச்சை வீழ்த்தி தனது 20-வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றார் ரஃபேல் நடால்.
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஃபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி, பாரிஸ் நகரில் நடைபெற்று வந்தது. இந்தத் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. இதில் 12 முறை சாம்பியனும், உலக தரவரிசையில் முதலிடம் வகிக்கும் செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சும், 19 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற இரண்டாம் நிலை வீரரான ஸ்பெயினின் ரஃபேல் நடாலும் மோதினர்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தப் போட்டியில், உலகின் முதல்நிலை வீரரான ஜோகோவிச்சை வீழ்த்தி நடால் சாம்பியன் பட்டம் வென்றார். இது ரஃபேல் நடால்-ன் 20-வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் என்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம், 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற ரோஜர் பெடரரின் சாதனையை நடால் சமன் செய்துள்ளார்.
சுமார் ஒன்றரை மணி நேரம் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில், ஆரம்பம் முதலே ஆட்டத்தை தனக்கு சாதகமாகமாக வைத்திருந்தார் நடால். முதல் செட்டை 6-0 என்றக் கணக்கிலும், இரண்டாம் செட்டை 6-2 என்றக் கணக்கிலும் நடால் கைப்பற்றினார். பரபரப்பான 3-வது செட்டில், ஜோகோவிச் சற்று நெருக்கடி கொடுத்தாலும், இறுதியில் 7-5 என நடால் கைப்பற்றினார். இதன் மூலம் 6-0, 6-2, 7-5 என நேர்செட் கண்கில் ஜோகோவிச்சை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் ரஃபேல் நடால்.