சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் பட்லரின் அரை சதத்தால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான இன்றைய ஐ.பி.எல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது.அதன் பிறகு களமிறங்கிய சென்னை அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்கள் எடுத்தது.
126 ரன்கள் இலக்குடன் ராஜஸ்தான் அணியின் சார்பில் தொடக்க வீரர்களாக பென் ஸ்டோக்ஸ் மற்றும் ராபின் உத்தப்பா உள்ளே வர,தொடக்கம் முதலே அடித்து ஆடிய ஸ்டோக்ஸ்(19 ரன்கள்,11 பந்துகள்) தீபக் சகார் வீசிய 3 வது ஓவரில் கிளீன் போல்ட் ஆனார்.மற்றொரு தொடக்க வீரரான உத்தப்பா 4 ரன்களில் வெளியேற,அடுத்து அந்த சஞ்சு சாம்சன் டக் அவுட் ஆகி நடையை கட்டினார்.மறுமுனையில் நிலைத்து நின்று ஆடி கேப்டன் ஸ்மித் விக்கெட் விழுகாமல் தடுக்க,ஸ்மித்க்கு பிறகு களம் இறங்கிய ஜாஸ் பட்லர் அதிரடியை வெளிப்படுத்தி அசத்தினார்.13 ஓவர் முடிவில் ராஜஸ்தான் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 83 ரன்களை பெற்று இருந்தது.தொடர்ந்து அடித்து ஆடிய பட்லர் சாவ்லா வீசிய 15 வது ஓவரில் அடுத்தது 3 பௌண்டரிகளை ஓட விட்டு அரை சதத்தை பூர்த்தி செய்தார்.
24 பந்துகளில் 14 ரன்கள் ராஜஸ்தான் அணிக்கு தேவை என்ற நிலையில் ஸ்மித் ஒரு பௌண்டரி அடிக்க,பட்லர் தன் பங்கிற்கு ஒரு சிக்ஸர் அடித்து நொறுக்கினார்.இருவரும் ரன்கள் எடுத்து கொண்டு செல்ல,7 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது.
ஆரம்பம் முதல் அதிரடியை வெளிப்படுத்தி ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாய் இருந்த ஜாஸ் பட்லருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.
ராஜஸ்தான் அணி மீதம் உள்ள நான்கு போட்டியில் நல்ல ரன் ரேட்டில் வெற்றி பெற்றால் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற அதிக வாய்ப்பு உள்ளது.