யார் இந்த ருது ராஜ் என்ற கேள்விக்கு பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் அரை சதம் அடித்து விடை அளித்தார் ருது ராஜ்.

துபாய் :
பெங்களூர் அணிக்கு எதிரான ஐ.பி.எல் போட்டியில் சென்னை அணி சிறப்பாக விளையாடி வெற்றியை பெற்றது. நேற்று முதலில் களமிறங்கிய பெங்களூர் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் எடுத்தது. அதனை தொடர்ந்து 146 ரன்கள் இலக்குடன் சென்னை அணியில் தொடக்க வீரர் ருது ராஜ் அதிரடியாக விளையாடி 65 ரன்கள் எடுத்து சென்னை அணியை 18.4 ஓவர்களில் 150 ரன்கள் பெற்று வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார்.இந்த போட்டியின் வெற்றியின் மூலம் சென்னை அணி நடப்பு ஐ.பி.எல் தொடரில் 4 வது வெற்றியை பதிவு செய்தது.

ருது ராஜ் கடந்த இரண்டு ஆண்டுகளாக சென்னை அணியில் நெட் பயிற்சியில் ஈடுபட்டாலும் தோனி இவருக்கு வாய்ப்பு வழங்கவில்லை.இந்த ஆண்டு ரெய்னா குடும்ப சூழ்நிலை காரணமாக விலக, அம்பதி ராயுடுவும் காயம் காரணமாக முதல் இரண்டு போட்டியில் விளையாடவில்லை.அப்பொழுது தோனியும்.அணி நிர்வாகமும் ருது ராஜ் மீது நம்பிக்கை வைத்து வாய்ப்புகள் வழங்கப்பட்டது.அந்த இரண்டு போட்டிகளிலும் சென்னை அணியின் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் வெளியேற, ருது ராஜ் மீது பிரஷர் திரும்பியது.இதனால் அந்த ஓரிரு போட்டிகளில் அவரால் சரியாக ஜொலிக்கவில்லை.அதன் பிறகு சென்னை அணியில் இருந்து மீண்டும் ஆடும் லெவன்ஸ் அணியில் இருந்து வெளியேற்றப்பட்டார். இத்தனை ஆண்டு காத்திருப்பிற்கு பிறகு பெங்களூர் அணிக்கு எதிராக தனது திறமையை வெளிப்படுத்தி அசத்தினார். இரண்டு ஆண்டுகளாக தோனியின் ஓர பார்வை நம் மீது திரும்புமா என்று ருது ராஜ் காத்திருந்த வேளையில் நேற்று அந்த சிறப்பான சம்பவம் அரங்கேறி தனது திறமையை ருது ராஜ் நிரூபித்து தான் யார் என்று சென்னை அணிக்கும்,இந்த உலகத்திற்கும் வெளிபடுத்தினார்.

இப்படி திறமையான வீரர்களை இன்னும் எத்தனை ஆண்டுகள் வாய்ப்பு வழங்காமல் காத்திருக்க வைக்க போகிறீர்கள் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி மீதும்,அணியின் நிர்வாகத்தின் மீதும் தொடர்ந்து கேள்விகள் எழுந்த வண்ணம் உள்ளது.




