கடைசி நேரத்தில் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரருக்கு, கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால் ஒருநாள் தொடர் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

கொரோனா ஊரடங்கிற்குப் பிறகு, சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் மீண்டும் தொடங்கியுள்ளன. வீரர்களின் பாதுகாப்பு கருதி, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக பின்பற்றப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், இங்கிலாந்து கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் நடைபெற்ற, டி20 தொடரை இங்கிலாந்து அணி 3-0 என கைப்பற்றியது.

இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி இன்று நடைபெறுவதாக இருந்தது.
முன்னதாக, கிரிக்கெட் வீரர்களுக்கு நீட்டது வீரர்களுக்கு இறுதிகட்ட கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இந்த பரிசோதனைகளின் முடிவில் தென் ஆப்பிரிக்க வீரர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து டாஸ் போடுவதற்கு முன்பே ஆட்டம் நிறுத்தப்பட்டது.

தொடர்ந்து, அனைத்து வீரர்கள், பயிற்சியாளர்களுக்கும் மீண்டும் பரிசோதனை நடத்தப்படவுள்ளது. இதில் யாருக்கும் கொரோனா இல்லை என்பது உறுதியானால், ஞாயிற்றுக்கிழமை தொடங்கி ஒருநாள் தொடர் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.




