சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் சிறப்பான பந்து வீச்சால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஹைதராபாத் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான இன்றைய ஐ.பி.எல் தொடர் 14 ஆட்டத்தில் சன்ரைசரஸ் ஐதராபாத் அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது.அதனை தொடர்ந்து கார்க் மற்றும் அபிசேக் சர்மாவின் அதிரடியால் ஐதராபாத் அணி 164 ரன்கள் எடுக்க, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 165 ரன்கள் என்ற இலக்குடன் களம் இறங்கியது.தொடக்க வீரர்களாக டு பிளிசி மற்றும் வாட்சன் வர,புவனேஷ்வர் குமார் பந்து வீச்சில் இன் சைடு எட்ஜ் போல்ட் ஆகி 1 ரன்னுடன் நடையை கட்டினார்.அடுத்து வந்த அம்பதி ராயுடுவும் பெரிதாக ஜொலிக்கவில்லை,நடராஜன் வீசிய 6 வது ஓவரில் அவரும் போல்ட் ஆகி வெளியேற,மறுமுனையில் ஓரளவு நம்பிக்கை அளித்த டு பிளிசி(22 ரன்கள்,19 பந்துகள்) ரன் அவுட்டுடன் வெளியேறினார்.
ஜாதவ் வந்து அடிப்பார் என்று எதிர்பார்க்க, அவரும் சமத் பந்தில் வார்னரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.10 ஓவர் முடிவில் சென்னை அணி 4 விக்கெட் இழந்து 44 ரன்களுடன் தடுமாறியது.அடுத்து களம் இறங்கிய கேப்டன் டோனி மற்றும் ஜடேஜா விக்கெட் இழப்பு ஏற்படாமல் தடுப்பதற்காக நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.சென்னை அணி 16 ஓவர்களில் 87 ரன்கள் எடுத்து இருந்தது.17 வது ஓவர் வீசிய புவனேஷ்வர் குமார் பந்தில் ஜடேஜா ஹாட்ரிக் பௌண்டரி அடித்து அசத்த,சென்னை அணி 100 ரன்களை கடந்தது.18பந்துகளுக்கு 63 ரன்கள் தேவை என்ற நிலையில் தமிழக வீரர் நடராஜன் பந்து வீச வர,அந்த ஓவரில் ஜடேஜா ஒரு பௌண்டரி,ஒரு சிக்ஸர் அடித்து இந்த தொடரில் தனது முதல் அரை சதத்தை கடக்க,அடுத்த பந்தே ஜடேஜா(50 ரன்கள்,35 பந்துகள்) சமத்திடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
அடுத்து வந்த சாம் கர்ர்ன் வந்த முதல் பந்து சிக்ஸர் அடித்து பறக்க விட ,சென்னை அணிக்கு 11 பந்துகளில் 43 ரன்கள் தேவையாக இருந்தது.ஒரு பந்து போட்டு சதை பிடிப்பு காரணமாக புவனேஷ்வர் குமார் வெளியேற,மீதம் உள்ள 5 பந்துகளை கலீல் போட வந்தார்.அந்த ஓவரில் டோனி மொத்தம் 15 ரன்கள் எடுத்தார்.கடைசி ஓவரில் சென்னை அணி 28 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்க,சமத் போட முதல் பந்து ஒய்டு பௌண்டரி போக,இன்னும் 23 ரன்கள் தேவையாக இருந்தது.டோனி ஒரு பௌண்டரி அடிக்க,மறுமுனையில் சாம் கர்ர்ன் ஒரு சிக்ஸர் அடித்தார்.20 ஓவர் முடிவில் சென்னை அணி 157 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தது.இறுதியில் சன்ரைசரஸ் ஐதராபாத் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டோனி 47 ரன்களுடனும்,சாம் கர்ர்ன் 15 ரன்களுடனும் அவுட் ஆகாமல் களத்தில் இருந்தனர்.
ஹைதராபாத் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாய் இருந்த பிரியம் கார்க் ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.