கொல்கத்தா ஐபிஎல் அணி வீரர் சுனில் நரைன் பந்துவீச்சில் சந்தேகம் இருப்பதாக கிரிக்கெட் நடுவர்கள் புகார் கூறியுள்ளனர்.
வெஸ்ட் இண்டீஸை சேர்ந்த முன்னணி சுழற்பந்து வீரர் சுனில் நரைன். இவர் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணிக்காக ஆடி வருகிறார்.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற பஞ்சாப்புக்கு எதிரான நேற்றைய போட்டியின்போது அவரது பந்து வீச்சு குறித்து போட்டி நடுவர்கள் புகார் செய்துள்ளனர். அவர் விதிமுறைகளை மீறி பந்து வீசுகிறார். அவரது பந்து வீச்சு முறை சந்தேகம் அளிக்கும் வகையில் உள்ளது என்றும் அவர்கள் புகார் தந்துள்ளனர்.
அவர் மீது ஏற்கனவே இது மாதிரியான குற்றச்சாட்டு வைக்கப்பட்டு இருந்தது நினைவிருக்கலாம். நடுவர்களின் புகாரைத் தொடர்ந்து சுனில் நரைன் பந்துவீச தடை விதிக்கப்படுமா என்பது குறித்து போட்டித் தேர்வுக் குழுவினர் முடிவு செய்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.