ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான மீதம் உள்ள 2 டெஸ்ட் போட்டிகளுக்கு துணைக் கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
சிட்னி :
ஆஸ்திரேலியாவில் இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிவருகிறது. விராட் கோலி தலைமையிலான முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்டில் நடந்தது. இந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. அதன்பிறகு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2 வது டெஸ்ட் போட்டியில் ரஹானே தலைமையிலான இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.
இந்தநிலையில், வலது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடரில் இருந்து நீக்கப்பட்ட ரோஹித் சர்மா, தற்போது உடல் நிலை தகுதி பெற்று கடந்த டிசம்பர் மாதம் 16 ம் தேதி ஆஸ்திரேலியாவிற்கு கிளம்பினார். 14 நாட்கள் தனிமை படுத்தப்பட்டு மீண்டும் இந்திய அணியிடம் டிசம்பர் 31 ம் தேதி ரோஹித் சர்மா இணைந்தார்.
Read more – நாடு முழுவதும் அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் : சுகாதாரத் துறை அமைச்சர் அறிவிப்பு
விராட் கோலி முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடி முடித்த பிறகு குடும்ப சூழ்நிலை காரணமாக நாடு திரும்பிய நிலையில் டெஸ்ட் அணியில் கேப்டனாக ரஹானே வழிநடத்தினார். அப்போது புஜாரா துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்தார். தற்போது புஜாராவிற்கு பதிலாக ரோஹித் சர்மா துணை கேப்டனாக செயல்படுவார் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.
ஏற்கனவே ஒருநாள் மற்றும் டி -20 போட்டிகளில் ரோஹித் சர்மா துணை கேப்டனாக செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.