அபார ஞாபக சக்தியின் மூலம் தனித்திறனை வெளிப்படுத்திய ஆண்டிப்பட்டியை சேர்ந்த 2½ வயது சிறுவன், இந்திய சாதனையாளர்கள் புத்தகத்தில் இடம் பிடித்தான்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஜீவன்மாணிக்கம். அவருக்கு ஒரு மனைவி மற்றும் ஒரு மகன் இருந்துள்ளார். அவரது மனைவியின் பெயர் திவ்யா மற்றும் மகனின் பெயர் ரினேஷ் ஆதித்யா அவருக்கு தற்போது 2 . 1/2 வயது ஆகின்றது. ஜீவன் மாணிக்கம் தற்போது தன் குடும்பத்துடன் இல்லாமல் கத்தார் நாட்டின் விமான நிலையத்தில் வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில் சிறுவன் ஆதித்யவிற்கு அபார நியாபக சக்தி உள்ளது என்பதை அவனுடைய பெற்றோர்கள் அறிந்தனர்.இதனையடுத்து தேசிய கொடிகளின் மூலம் நாடுகளின் பெயர்களை கூறுதல், இந்திய நாட்டின் தற்போதைய மத்திய மந்திரிகளின் பெயர்கள், உலக நாடுகளின் பிரசித்தி பெற்ற விமானங்களின் பெயர்கள், பல்வேறு நாடுகளின் அதிபர்கள், பிரதமர்களின் பெயர்கள், ‘லோகோ’ மூலம் பிரபல நிறுவனங்களின் பெயர்களை கூறுதல் தொடர்பாக அவனுக்கு பெற்றோர் பயிற்சி அளித்துள்ளனர்.
பெற்றோர்கள் கற்றுக்கொடுத்ததை கற்பூரம் போல பிடித்துக்கொண்ட ஆதித்ய எப்போது எந்த கொடியை காட்டினாலும் அந்த கொடி சொந்தமான நாட்டை சட்டென்று கூறி அனைவரையும் ஆச்சரிய படுத்துகிறான். மேலும் இந்த 2½ வயது சிறுவனின் அசாத்திய தனித்திறமை காரணமாக, இந்திய சாதனையாளர்கள் புத்தகத்தில் அவன் இடம் பெற்றுள்ளான். அதனையடுத்து கலாம் விஷன் இந்தியா-2020 சான்றிதழ்களை பெற்றுள்ளான். இதுகுறித்து தேனி மாவட்ட ஆட்சியரும் சிறுவனை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.