சுதந்திர தினவிழாவில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணுவிற்கு தகைசால் தமிழர் விருது வழங்கப்பட்டது.
நாட்டின் 76வது சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.சென்னையில் உள்ள ஜார்ஜ் கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். இந்திய துணைக்கண்டத்தில் முதல் முறையாக சுதந்திர முழக்கத்தை எழுப்பியது தமிழ்நாடுதான். அடிமைப்படுத்துதல் தொடங்கிய நாள் முதல் அதை எதிர்த்து போராட தொடங்கியது தமிழ்மண். இதன்காரணமாகவே இங்கு தமிழனாக தேசிய கொடியை ஏற்றும் போது மிகுந்த உணர்ச்சி அடைகிறேன் என்றார். அதன்பிறகு பல்வேறு நபர்களுக்கு விருதுகளை வழங்கி கவுரவித்தார்.
இந்த நிகழ்ச்சியின் ஒருபகுதியாக, கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணுவிற்கு தகைசார் தமிழர் விருது வழங்கப்பட்டது. அதனுடன் ₹10 லட்சத்திற்கான காசோலையும் வழங்கப்பட்டது. இதை பெற்றுக்கொண்ட அவர் தனது ₹5000 சேர்த்து ₹10 லட்சத்து 5 ஆயிரத்தை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கினார். இதை பலரும் பாராட்டினர்.