கற்றுக் கொள்வதற்கு எல்லையே இல்லை…. இன்டர்நேஷனல் வேர்ல்டு கிளாசிக் பட்டத்தை வென்றார் இந்தியாவின் ஃப்ளோரன்ஸ் நளினி
மிஸஸ் இன்டர்நேஷனல் வேர்ல்டு கிளாசிக் இந்தியா பட்டத்தை வென்றார் டாக்டர் பிளோரான்ஸ் நளினி. 2021-ஆம் ஆண்டிற்கான மிஸஸ் இன்டர்நேஷனல் வேர்ல்ட் கிளாசிக் இந்தியா பட்டத்தினை டாக்டர் நளினி தட்டிச் சென்றார். மிஸஸ் இன்டர்நேஷனல் வேர்ல்ட் கிளாசிக் இந்தியா மட்டுமல்லாது Glamorous Achiever என்ற பட்டத்தினையும் வென்றிருக்கிறார் டாக்டர் ப்ளோரன்ஸ் நளினி.
இதனைத்தொடர்ந்து அமெரிக்காவின் மியாமி புளோரிடாவில் நடைபெற உள்ள இன்டர்நேஷனல் அழகிப் போட்டியிலும் இந்தியா சார்பாக இவர் கலந்து கொள்ள உள்ளார். இந்த போட்டியில் வென்றதை தொடர்ந்து தனது நண்பர்கள் உறவினர்கள் மற்றும் தனக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் தனது நன்றியை உரித்தாக்கிக் கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.
கொரோனா பாதிப்பால் வீட்டில் முடங்கியவர்கள் மத்தியில், மீண்டு(ம்) வந்து சாதித்ததற்கு தன்னம்பிக்கையே காரணம் எனும் Dr.ப்ளாரன்ஸ் நளினி, கற்றுக் கொள்வதற்கு எல்லையே இல்லை என நெகிழ்கிறார். பயணங்களே தன்னை செதுக்கியதாக தெரிவித்துள்ள அவர், புதிய விசயங்களை கற்றுக்கொள்வதற்கும், சவால்களை சந்திப்பதற்கும் தன்னுடைய மருத்துவத்துறையே பெரிதும் உதவியதாக தெரிவித்துளளார்.