திரைப்படத்தின் இண்டர்வல் காட்சி வரும் போது என்ன மனநிலை இருக்குமோ அதே மனநிலை தான் நமக்கும் இப்போது இருக்க வேண்டும். என சிவகங்கையை சேர்ந்த பொதுநல மருத்துவர் ஆன Dr.ஃபரூக் அப்துல்லா தெரிவித்து உள்ளார்.
அவர் மேலும் இது பற்றி பதிவிட்டுள்ள விவரங்கள் பின்வருமாறு:
கொரோனா நோய் தொற்றுப்பரவல் நிலையின் இடைவெளிப்பகுதியில் இருக்கிறோம் படத்தில் இண்டர்வெல் வரும் போது கொஞ்சம் ரிலாக்ஸாக ரெஸ்ட் ரூம் போவது, பாப்கார்ன் சாப்பிடுவது போன்ற விசயங்களை செய்தாலும் நம் மனதில் அடுத்து என்ன நடக்கும் ??க்ளைமாக்ஸ் எப்படி இருக்கும்??ஆண்ட்டி க்ளைமாக்ஸா? .சுபமான க்ளைமாக்ஸா? என்று பல கேள்விகள் மனதுக்குள் ஓடும் அதே மனநிலை தான் இப்போதும்..
நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் பொருட்டு அன்லாக் 4.0 விதிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டு அவற்றில் பெரும்பான்மையை மாநில அரசு ஏற்றுக்கொண்டிருக்கிறது இருப்பினும் கொரோனா தொற்றானது இன்னும் கனிசமான நமது மக்கள் தொகைக்கு பரவாமல் இருக்கிறது என்பது கண்கூடு நமது முக்கியமான நெகடிவ் விசயங்களான அதீத மக்கள் தொகை மற்றும் மக்கள் தொகை அடர்த்தி என்பது அப்படியே தான் இருக்கிறது .
மேலும் கொரோனா வைரஸ் ஜனவரி மாதம் நம் நாட்டுக்குள் நுழைந்த போது புகுந்த வீட்டில் நுழைந்த புதிதாக திருமணம் ஆகி நுழைந்த மணப்பெண் போல திக்குத்தெரியாமல் இருந்தது. அப்போது நிலவிய கடும் வெப்பம் ,கடுமையாக கடைபிடித்த லாக்டவுன் போன்றவற்றால் வைரஸுக்கு பின்னடைவு இருந்தது உண்மை ஆனால் இப்போது நிலைமை மாறுபட்டு வைரஸுக்கு சாதகமான குளிர்கால சூழல் நிலவ இருக்கிறது . கூடவே அவ்வப்போது நல்ல மழையும் பொழிய இருக்கிறது.
பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேண்டிய நிலையில் லாக் டவுன் தளர்த்தப்பட்டிருப்பது பொது போக்குவரத்து திறந்து விடப்பட உள்ளது. இதில் நமது பக்க அட்வாண்டேஜ் என்னவாக இருக்கும்? கடந்த ஆறுமாதமாக இந்த கோவிட் நோயைப்பற்றி மக்கள் அறிந்து வைத்திருப்பதும்.. அதை எவ்வாறு தடுக்க வேண்டும் என்பது குறித்த அறிவைப்பெற்றிருப்பதும் ஒரு அட்வாண்டேஜ்
இருப்பினும் பலரும் இந்த நோய்ப்பரவலை சாதாரணமாக எடுத்துக்கொண்டு முகக்கவசம் அணியாமல் முறையாக தனிமனித இடைவெளியை கடைபிடிக்காமல் இன்னும் இருப்பது பின்னடைவு பெரும்பாலும் அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் பணிபுரியும் மருத்துவர்கள் மற்றும் குழுவினருக்கு கோவிட் நோயை சிகிச்சை அளிப்பது குறித்த நேரடி ஞானம் பெற்றிருப்பது நமக்கு அட்வான்டேஜ் 136 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியா அதில் 8 கோடி மக்கள் தொகை கொண்ட தமிழகம் .
இன்னும் சில நாட்களில் பல ஊர்களில் இருந்தும் மாவட்டம் விட்டு மாவட்டம் மாநிலம் விட்டு மாநிலம் மக்கள் புலம்பெயர உள்ளனர் இவர்களுடன் கிருமித்தொற்றும் புலம்பெயர உள்ளது தமிழகத்தை நம்பி இருக்கும் ஒரு கோடி வட இந்திய புலம்பெயர்தொழிலாளர்கள் மீண்டும் நம்மை நோக்கி வர இருக்கின்றனர்.
இவையெல்லாம் நமக்கு பெரும் சவாலாக இருக்கப்போகின்றன சரி..இத்தனையில் இருந்தும் நம்மை எப்படிக்காத்துக்கொள்வது? வெளியே சென்றால் முகக்கவசம் அணிய வேண்டும் தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். தேவையற்று அவசியமற்றுகூட்டம் கூடுதல் தவறு. அவசியமற்ற பயணங்களை ஒத்துப்போடுதல் நல்லது திருமணம் போன்ற பலர் கூடிப்பிரியும் வைபவங்களை கூடுமானவரை முடிந்தவரை இன்னும் சில மாதம் தள்ளிப்போடலாம் கைகளை அடிக்கடி வழலை கொண்டு தேய்த்துக் கழுவலாம் கொரோனா தொற்றுப்பரவல் நடவடிக்கைகளில் நாம் இடைவேளை காட்சியை மட்டுமே நெருங்கியிருப்பதால் இன்னுமின்னும் எச்சரிக்கையுடன் அடுத்து வரும் நாட்களை எதிர்நோக்க வேண்டும். அறிகுறிகளை எப்போதும் உதாசீனப்படுத்தக்கூடாது. அறிகுறிகள் தோன்றும் போதே மருத்துவ உதவியை நாட வேண்டும் .இவ்வாறு மருத்துவர் Dr.ஃபரூக் அப்துல்லா பதிவிட்டுள்ளார்.