Monday, March 2, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home சிறப்பு கட்டுரைகள்

கொரனோ தடுப்பூசிகளுக்கு மக்கள் அச்சப்பட காரணம் என்ன?

January 18, 2021

உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது கொரனோ வைரஸ். மக்கள் அனைவரும் கொரனோவுக்கான தடுப்பு மருந்து எப்போது வரும் என எதிர்பார்த்து காத்திருந்தனர்.நாம் அனைவரும் எதிர்பார்த்து கொண்டிருந்த தடுப்பு மருந்தும் ஒரு வழியாக பயன்பாட்டுக்கு வந்துள்ளது. சீரம் நிறுவனத்தின் கோவிட்ஷீல்டு மற்றும் பாரத் பயோ டெக் நிறுவனத்தின் கோவாக்சின் என்ற இரண்டு தடுப்பூசிகள் தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இந்த இரண்டு நிறுவனங்களும் இந்திய நிறுவனங்கள்.

ஜனவரி 16ஆம் தேதி முதல் இந்த இரண்டு தடுப்புசிகளும் மக்களுக்கு போடப்பட்டு வருகிறது. முதலில் முன்களப் பணியாளர்களான துப்புரவு தொழிலாளர்களுக்கும், மருத்துவ ஊழியர்களுக்கும் போடப்பட்டது. தமிழகத்தில் மதுரை மாவட்டத்தில் முதன் முதலில் தடுப்பூசி இலவசமாக  போடப்பட்டது. இந்நிலையில் கொரனோ தடுப்பூசியை போட்டுக்கொள்ள பொதுமக்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். தடுப்பூசியால் பக்கவிளைவுகள் எதுவும் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் தான் காரணம்.

மூக்கு வழியே செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்துக்கு அனுமதி

2000 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம்

இறந்தவருக்கு இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியதாக வந்த குறுஞ்செய்தி..!

இதுவரை, 6 மாவட்டங்களில் தடுப்பூசி போட்டுக்கொண்ட 17,072 பேர்களில் 447 பேருக்கு ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது. அவர்களில் 4 பேருக்கு மட்டுமே மருத்துவமனை சிகிச்சை தேவைப்பட்டது. 3 பேர் சிகிச்சை முடிந்து வீட்டிற்கு சென்று விட்ட நிலையில் ஒருவர் மட்டும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மருத்துவர் கண்காணிப்பில் உள்ளார். அவரும் இயல்பாக உள்ளதாக கூறப்படுகிறது. 


உத்திரபிரதேச அரசு மருத்துவமனை ஊழியர் ஒருவர் கொரனோ தடுப்பூசி போடப்பட்ட பின் உயிரிழந்துள்ளது மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேசம் முராதாபாத்தின் அறுவைசிகிச்சை பிரிவில் வார்டு பாயாக பணியாற்றி வருபவர்  மஹிபால் சிங். கொரனோ தடுப்பூசி போடப்பட்ட மறுநாள் உயிரிழந்துள்ளார். திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு நெஞ்சுவலியும் அதிகமாகியுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கொரனோ தடுப்பூசி போட்டுக் கொண்ட அன்று இரவு மஹிபால் வழக்கம் போல இல்லை எனவும், காலை லேசான காய்ச்சல் ஏற்பட்டு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். தமிழகத்தில் இதுவரை இப்படி உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்பதே ஆறுதலாக உள்ளது. 

இந்தியாவின் இரண்டு நிறுவனங்களின் கொரனோ தடுப்பூசி மருந்துகளும் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட சோதனையில் தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

திமுக-வுடன் கைகோர்க்க திட்டம்!!! அதிமுக-வை கழட்டி விட முடிவு!!!

Next Post

டிராக்டர் பேரணி!: தலைநகரில் யாரை அனுமதிக்கலாம்; போலீஸ் முடிவு செய்யும்!

Next Post

டிராக்டர் பேரணி!: தலைநகரில் யாரை அனுமதிக்கலாம்; போலீஸ் முடிவு செய்யும்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version