தமிழகத்தில் 2007 முதல் 2017 வரையிலான நடைமுறை என்பது நேர்மையான ஒருங்கிணைந்த வளர்ச்சி என்ற பாதையில் பயணித்தது.இது குறித்து Dr.ஃபரூக் அப்துல்லாபொது நல மருத்துவர் சிவகங்கை நமக்கு அளித்து உள்ள தகவல்கள் பின்வருமாறு
பொறியியல் படிப்புகளுக்கும் சரி,மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கும் சரி..பனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகளே இறுதியானவையாக இருந்தன.பணம் உள்ள மேல் தட்டு மக்களும் சரி.பணம் இல்லாத கீழ் தட்டு மக்களும் சரிஒருங்கே பயனடைந்தனர்யாருடைய வாய்ப்பும் யாருக்காகவும் பறிபோகவில்லை.
இண்வர்ட்டர் கனெக்சன் கொடுத்து கரண்ட் போவது என்னவென்றே தெரியாத வீட்டில் இருந்தும் மாணவர்கள் படித்து மருத்துவம் சேர்ந்தார்கள்குண்டு பல்பு மட்டுமே இருக்கும். அங்கு கரண்ட் போனால் அரிகேன் லைட்டில் படித்தும் தெருவிளக்கின் கீழ் படித்த மாணவர்களும் மருத்துவம் சேர்ந்தார்கள்
காரணம் மருத்துவம் சேரும் முறை எளிமையானதாக இருந்தது.பனிரெண்டாம் வகுப்பை நன்றாக படித்தால் சிறப்பாக பரீட்சை எழுதினால் போதும்இதற்காக தனியாக கோச்சிங் செல்லத்தேவையில்லை.
தனியாக ஒன்றிரண்டு வருடங்கள் வீணடிக்க தேவையில்லைஇது பிள்ளைகளின் மன பாரத்தை குறைத்தன.எனவே பட்டி தொட்டி கிராமங்களில் இருந்தெல்லாம் மருத்துவர்கள் தோன்றினர்.
மருத்துவக்கல்லூரியில் ஏழை வீட்டுப்பிள்ளைபணக்காரர் வீட்டுப்பிள்ளை என்று ஒரு கலவை இருந்தது.
இன்று நடப்பது என்ன?
மருத்துவக்கல்வியில் நுழைவதற்கான முறைகள் மிகவும் கடினமாக்கப்பட்டுள்ளன.பதினொன்று பனிரெண்டு ஆகிய இரண்டு வகுப்புகளின் மதிப்பெண்களும் கிட்டத்தட்ட தேவையற்றவையாகி இருக்கின்றன.
இவையன்றியும் நீட்டிற்கு தனியாக கோச்சிங் பெற வேண்டும்.தனியாக ஒன்று அல்லது இரண்டு வருடங்கள் ஒதுக்கி படிக்க முடிந்தவர்கள் மட்டுமே இதை தாண்டிட முடியும் என்ற நிலைஇப்போது நாம் கேட்பது இதைத்தான்நம் நாட்டில்அனைத்து மக்களுக்கும் சரிசமமான வாய்ப்பு வழங்கி ஒருங்கிணைந்த வளர்ச்சி அமைவது தானே சிறந்த வழி.
கட்சிபாகுபாடற்று சிந்தித்தால் இளங்கலை மருத்துவப்படிப்பில் சேர்வதற்கு இத்தனை கொடுமையான முறை அவசியமே இல்லைமருத்துவப்படிப்பில் இருந்து வெளியே வருபவர்களுக்கு தரக்கட்டுப்பாடுடன் கூடிய பரீட்சைகள் வருடாவருடம் அந்தந்த மருத்துவ பல்கலைக்கழகங்களால் நடத்தப்படுகின்றன.
அதுவே சிறந்த மருத்துவர்கள் வெளியே வருவதை உறுதி செய்கின்றன.மேலும் முதுகலைப்படிப்புக்கு நீட் இருக்கிறது. அதை கிட்டதட்ட யாரும் எதிர்க்கவில்லை
( எனது எண்ணம் அதுவும் எதிர்க்கப்படவேண்டியது என்பதே. )
அப்படியிருக்க…சமூகத்தில் சிலருக்கு அட்வாண்டேஜாகசிலருக்கு டிஸ்அட்வாண்டேஜாக இருக்கும் ஒரு முறை தேவையற்றது இதை நீக்கி பதினொன்று பனிரெண்டாம் வகுப்பு மதிப்பெண்களை கொண்டே மருத்துவ மாணவர்களை நாடு முழுவதும் சேர்க்கும் வரையறை கொண்டு வருவது நன்மை பயக்கும்.
தாயுள்ளம் கொண்ட மாநில மத்திய அரசுகள்இதை சரிசெய்து நீட்டை அனைத்திந்திய இடங்கள் (15%) க்கு மட்டும் வைத்துக்கொண்டுமீதம் உள்ள மாநில கோட்டா சீட்டுகளுக்கு பதினொன்று பனிரெண்டாம் வகுப்பு மதிப்பெண்களை கொண்டு அந்தந்த மாநிலங்கள் மருத்துவ இடங்களை வழங்கலாம் என்று சட்டம் கொண்டு வருவது சிறப்பானதாக அமையும்.