அப்துல்கலாம் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது புத்தகங்கள் கொண்ட புதிய அறை மற்றும் மரக்கன்றுகளை நட்ட காவல்துறையினர்
முன்னாள் இந்திய குடியரசு தலைவர் டாக்டர் அப்துல்கலாம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு¸ இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை சார்பில்¸ சுமார் 1200 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இராமநாதபுரம் சரக துணை தலைவர் திரு.மயில்வாகனன்.¸ இ.கா.ப அவர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. வருண்குமார்.¸ இ.கா.ப ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வரும் பார்வையாளர்கள் பயன்பெறும் வகையில்¸ அப்துல்கலாம் அவர்கள் எழுதிய புத்தகங்கள் கொண்ட புதிய அறையை சரக துணை தலைவர் அவர்கள் துவக்கி வைத்து கலாம் நினைவலைகளில் மூழ்கினர் இதில் குழந்தைகளும் பங்கேற்றனர்