RTPCR எனும் கோவிட் பரிசோதனை நூற்றுக்கு எழுபது முறை மட்டுமே சரியான முடிவை தருகிறது.இது குறித்து நமக்கு சிவகங்கையை சேர்ந்த பொது நல மருத்துவர் Dr.ஃபரூக் அப்துல்லா அளித்துள்ள தகவல்கள் பின்வருமாறு.

இதற்கான முக்கிய காரணம்:
தொற்றுக்கான அறிகுறி ஏற்பட்டு முதல் சில நாட்கள் மட்டுமே வைரஸ் தொண்டைப்பகுதியிலும் நாசியிலும்
இருக்கும்.

எனவே எவ்வளவு விரைவாக RTPCR பரிசோதனை செய்கிறோமோ அத்தனை அதிக வாய்ப்பு அது உள்ளதை உள்ளபடி பாசிடிவாக தெரிவிக்கும். இதை True positive
என்போம்.
அறிகுறிகள் தோன்றிய 1முதல் 7 நாட்கள் 67% பாசிடிவாக வாய்ப்பு8 முதல் 14 நாட்களில் பாசிடிவாகும் விகிதம்54% ஆக குறைந்துவிடுகிறதுஅதாவது இரண்டாவது வாரம் டெஸ்ட் எடுத்தால் வைரஸ் தொற்று இருந்தாலும் 50:50 தான் பாசிடிவாக வாய்ப்பு உள்ளது.
இரண்டு வாரங்கள் தாண்டிய பின் அந்த சதவிகிதம் 50க்கும் கீழ் குறைகிறது எனவேகொரோனா தொற்றில் அறிகுறிகள் தான் “பாஸ்”(BOSS)
காய்ச்சல்,இருமல்,தொண்டை வலி மூச்சு விடுவதில் சிரமம் இருந்தால் யோசிக்காமல் உடனே பரிசோதனை செய்யுங்கள்மேற்சொன்ன அறிகுறிகள் இருக்கின்றனஆனால் RTPCR பரிசோதனை நெகடிவ் என்று வருகிறது என்றால்உடனே மருத்துவரிடன் பரிந்துரையில் நெஞ்சுப்பகுதி CT ஸ்கேன் எடுத்துப்பாருங்கள்.

நெஞ்சுப்பகுதி CT ஸ்கேனில் கொரோனா தொற்று நெஞ்சாங்கூட்டில் அனா ஆவன்னா எழுதியது தெரியவரும்இது கிட்டத்தட்ட 98% உறுதியான முடிவை தரும்.
சிடி ஸ்கேனில் CORAD என்ற அளவு முறைப்படி கதிரியியல் மருத்துவ சகோதர சகோதரிகள் உங்களது நுரையீரல் தொற்றை வகைப்படுத்துவார்கள்அதில் CORAD 3 க்கு மேல் 4,5 என்று வகைப்படுத்தினால் வந்திருப்பது கொரோனா தான்இப்போது RTPCR பரிசோதனை பாசிடிவோ நெகடிவோ அதைப்பற்றி யோசித்து ப்ரயோஜனம் இல்லை.

உடனே மருத்துவர் அறிவுரையை ஏற்று சிகிச்சை பெறுங்கள்அறிகுறிகளை ஒருபோதும் அலட்சியம் செய்யாதீர்கள்உடனே விரைந்து பரிசோதனை செய்யுங்கள் விரைவில் கண்டறிவது பாதி வெற்றிக்குச் சமம்.என டாக்டர் Dr.ஃபரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.




