2k கிடஸ்களிடம் சில்க் என்றால் என்ன என்றால் ‘ Dairy milk silk ‘ என்று கூறுவார்கள். ஆனால் என்பது மற்றும் தொன்னூறுகளில் பிறந்தவர்களிடம் சில்க் என்றால், அவர்களுக்கு முதலில் நினைவுக்கு வருவது சில்க் ஸ்மிதா தான். அந்த அளவுக்கு தன் அழகினால் மக்கள் மனதில் இடம்பிடித்திருந்தார் சில்க ஸ்மிதா. உண்மையில் இவரது பெயர் விஜயலட்சுமி. ஆந்திராவில்1960ல் பிறந்தார். சிறு வயதிலேயே திருமணம் முடிந்து பின் அதில் பிரச்சனை ஏற்பட்டு வேலை தேடி சென்னைக்கு வந்தார். சினிமாவில் நடித்து தம் நடிப்பினால் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. அதனால் சென்னை வந்தவுடன் சினிமா வாய்ப்பு தேடி அழைந்தார்.
இயக்குநர் வினுசக்கரவர்த்தி வண்டிச்சக்கரம் என்ற படத்தில் சின்ன கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார். அதில் சில்க் என்ற கதாபாத்திரத்தில் கவர்ச்சி பெண்ணாக நடித்தார். அதிலிருந்து சில்க் என்ற பெயரே நிலைத்து விட்டது. சின்ன கதாபாத்திரம் தான் என்றாலும் தன் சொக்கும் விழிகளாலும், கட்டுடலாலும் மக்களை ஈர்த்தார். ரசிகர்களிடம் கிடைத்த வரவேற்பு காரணமாக தொடர்ச்சியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
ஆனால் அவை அனைத்தும் கவர்ச்சி கதாபாத்திரங்களாகவே இருந்தன. அந்த கதாபாத்திரத்திலும் நடிக்க சிறிய வாய்ப்பு கிடைத்தாலும் அபாரமாக நடித்திருப்பார். மூன்றாம் பிறை, அலைகள் ஓய்வதில்லை போன்ற படங்கள் அவரது நடிப்பு பசிக்கு தீனி போட்டது. குறுகிய காலத்திலேயே 450க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து புகழின் உச்சிக்கு சென்றார்.
சினிமா துறையில் ஏற்பட்ட முன்னேற்றம் அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்படவில்லை. அன்றைய காலத்தில் எம்.ஜி.ஆர் கலந்து கொண்ட விழாவில் பங்கேற்க மறுத்தது, சிவாஜி படப்பிடிப்பு தளத்திற்க்கு வரும் போது எழுந்து மரியாதை செய்ய மறுத்தது போன்ற விஷயங்கள் சர்ச்சையை ஏற்படுத்தியது. யாரும் எதிர்பாராத வகையில், 1996 ல் சென்னையில் உள்ள தன் இல்லத்தில் இறந்து கிடந்தார். கடன் தொல்லை, காதல்தோல்வி மற்றும் குடும்ப விஷயங்களால் தற்கொலை செய்து கொள்ளப்பட்டதாக கூறப்பட்டது.
புகழின் உச்சியில் இருத்த நடிகை இறந்த பிறகு அனாதை பிணமாக மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்ததார். பின்பு ஆந்திராவில் இருந்து தாயார் மற்றும் சகோதரர் வந்து உடலை பெற்றுக்கொண்டனர். அவர்கள் இது தற்கொலை இல்லை என்றும், சொத்துக்காக கொலை செய்துள்ளனர் என்று குற்றம் சாட்டியும் யாரும் கண்டுகொள்ளவில்லை. அவரது தனிப்பட்ட வாழ்க்கையைப் போல், இறப்பும் மர்மமானதாகவே இன்றளவும் இருக்கிறது. இந்த கவர்ச்சி கன்னியின் வாழ்க்கை, அவள் அப்படித்தான் என்ற பெயரில் படமாக்க பட இருக்கிறது.