Wednesday, February 4, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home சிறப்பு கட்டுரைகள்

தேமுதிகவால் உருவான தொங்கு சட்டசபை – மூன்றாவது கட்சியா தேமுதிக?

January 22, 2021

ஒரு கட்சி ஆட்சியை பிடிக்க வேண்டுமென்றால், மொத்தமுள்ள தொகுதிகளில் பாதிக்கு மேல் தொகுதியில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். எந்த கட்சியும் இவ்வாறு வெற்றி பெறாத பட்சத்தில் தொங்கு சட்டசபை உருவாகும். இதர கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்களுடன் சேர்ந்து பெரும்பான்மையை நிரூபிக்கும் கட்சி ஆட்சியை பிடிக்கும். தமிழகத்தில் தொங்கு சட்டசபை இரண்டு முறை ஏற்பட்டுள்ளது.

1952 சட்டமன்ற தேர்தல்

No Content Available

புதிய அரசியலைமைப்பு சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு நடைபெற்ற முதல் தேர்தல் 1952 சட்டமன்ற தேர்தல். 21 வயது நிரம்பியவர்கள் வாக்களித்த முதல் தேர்தல் இது. அன்றைய சென்னையில் இருந்த மொத்த தொகுதிகள் 375. தற்போதைய ஆந்திரா, கர்நாடகம், கேரள மாநிலங்களின் சில இடங்களும் மெட்ராஸ் மாகாணத்துடன் இணைந்திருந்தது. பின் மொழிவாரியாக அவைகள் பிரிக்கப்பட்டு விட்டன.

சுதந்திர போராட்டத்தில் முன்னணியில் இருந்த காங்கிரஸ் கட்சி மக்களிடம் செல்வாக்கு அதிகம் பெற்றிருந்தது. தவிர இடதுசாரி கட்சிகளும் தனியாக தேர்தல் களத்தில் குதித்திருந்தது. மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையில் தேர்தல் நடத்தப்பட்டு முடிவுகளும் வெளியிடப்பட்டன. காங்கிரஸ் கட்சிக்கு 152 இடங்கள் மட்டுமே கிடைத்தது. எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையில் எப்படி ஆட்சியமைக்க முடியும்? எஸ்.எஸ்.இராமசாமி படையாட்சி(தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி), மாணிக்கவேலு நாயக்கர்(காமன் வீல் கட்சி), பி.பக்தவத்ச நாயுடு போன்றவர்கள் ஆதரவு அளித்ததால் பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சி அமைத்தது காங்கிரஸ்.

2006 சட்டமன்ற தேர்தல்

1952 சட்டமன்ற தேர்தலுக்குப் பின், தமிழகத்தில் தொங்கு சட்டசபை ஏற்பட்டது 2006 சட்டமன்ற தேர்தலில் தான். மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பின், மொத்தம் 234 தொகுதிகள் இருந்தது. திமுகவுடன் இந்திய தேசிய காங்கிரஸ், பாட்டாளி மக்கள் கட்சி, இந்திய பொதுவுடைமை கட்சிகள் கூட்டணி சேர்ந்து தேர்தலை சந்தித்தது. நீங்கள் மட்டும் தான் கூட்டணி வைப்பீர்களா நாங்களும் வைப்போம் என்று அதிமுக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகம், விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் கூட்டணியுடன் தேர்தலை எதிர்கொண்டது. அந்த தேர்தலில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய கட்சி விஜயகாந்தால் தோற்றுவிக்கப்பட்ட தேமுதிக. கட்சி ஆரம்பித்து ஓராண்டு மட்டுமே ஆகியிருந்த நிலையில் 232 தொகுதிகளில் தனித்து போட்டியிட்டது.

விருத்தாசலம் தொகுதியில் நின்ற விஜயகாந்த்தை தவிர அவரது கட்சியினர் அனைவரும் தோல்வியைத் தழுவினர். ஆனால், முதல் தேர்தலிலேயே 8.4 சதவீத வாக்குகளை பெற்றிருந்தது தேமுதிக. முடிவில், நூறுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் அதிமுக மற்றும் திமுக-வின் வெற்றி வாய்ப்புகளை தேமுதிக சேதப்படுத்தியிருந்தது. இதனால் திமுக-வுக்கு 96 இடங்களும், அதிமுக-வுக்கு 61 இடங்களும் கிடைத்தன. . எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாததால் 1952க்குப் பின் மீண்டும் தொங்கு சட்டசபை ஏற்பட்டது. பின், கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சியமைத்தது திமுக.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

செல்லப்பிராணிகளுடன் கொஞ்சி விளையாடிய டொவினோ! #PhotoAlbum

Next Post

குக் வித் கோமாளி நிகழ்ச்சி பிரபலம் பவித்ராவிற்கு நடந்த சோகம் : ட்விட்டரில் வீடியோ வெளியீடு

Next Post

குக் வித் கோமாளி நிகழ்ச்சி பிரபலம் பவித்ராவிற்கு நடந்த சோகம் : ட்விட்டரில் வீடியோ வெளியீடு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025

புதிய உதயம்; திராவிட வெற்றிக் கழகம்!

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version