உலகளாவிய ரீதியில் அருகி வருகின்ற உயிரனமாக
IUCN அமையத்தினால் வகைப்படுத்தப் பட்டுள்ள சிங்கங்களை பாதுகாக்கவேண்டிய
தன் அவசியம் தொடர்பாக விழிப்புணர்வினை ஏற்படுத்தும் முகமாக உலக சிங்க தினம்
கொண்டாடப்படுகின்றது.

அந்தவகையில்,சிங்கங்கள் தொடர்பிலானசுவாரஷ்சியமான தகவல்கள் இதோ…!
சிங்கங்களின் கர்ஜனை ஓசை 5 மைல்களுக்குஅப்பாலும்கேட்கக்கூடியதாகும். சிங்கங்கள் நடக்கின்றபோது அவற்றின் குதிகால்கள்தரையில் படுவதில்லை.சிங்கங்கள் ஒரு நாளில்16 முதல் 20 மணி நேரத்தை தூக்கத்திலும்,ஓய்விலுமேசெலவிடுகின்றன.
சிங்கங்கள் மிகச்சிறப்பான இரவு நேரபார்வையினைக் கொண்டவையாகும். இதன் காரணமாக அவை சிலவேட்டையாடுதல்களை இரவு நேரத்திலேயே
மேற்கொள்கின்றன. ஆண் சிங்கங்களை விட,பெண் சிங்கங்களே பெரும்பாலான வேட்டையாடல்களை மேற்கொள்கின்றன.ஆண் சிங்கங்கள் தனது ஆட்சிபுலத்துக்குரிய பிராந்தியத்தினையும், தனது குட்டிகளினையும் பாதுகாப்பதிலேயே தனது நேரத்தினை செலவிடுகின்றது.

பெரிய பூனை இனங்களில் சிங்கங்கள் மாத்திரமே சமூகவியலானவை ஆகும்.சிங்கங்கள் குழுக்களாகவே வாழ்கின்ற இயல்பினைக் கொண்டவையாகும். ஒரு குழுவில் 30 வரையானசிங்கங்கள் ஒன்றாகவே வாழ்கின்றன.
சிங்கங்கள் மணிக்கு 81கிலோ மீட்டர்(50mph)வேகத்தில் ஓடக்கூடியவையாகும்.சிங்கங்கள் 5-6 நாட்கள் வரையில் நீரின்றி தனதுகாலத்தினை கழிக்கக் கூடியவையாகும்.
தனது உடற் பருமனுடன்ஒப்பிடுகின்றபோது மிகச்சிறிய இதயத்தினை கொண்டுள்ள
விலங்கினம் சிங்கம் ஆகும்.சிங்கத்தின் இதயமானது, அதன் உடற்பருமனில் 1% லும் குறைந்த பாகத்தினையே வகிக்கின்றது.
ஒரேஅமர்வில்சிங்கங்கள் 30 kg இறைச்சியினை உட்கொள்ளும் ஆற்றலைக் கொண்டவையாகும்.உலகில் மிகப்பிரபலமான தேசிய விலங்கு என்கின்ற பெருமைக்குரிய விலங்கினம் சிங்கம் ஆகும். ஆர்மேனியா, நெதர்லாந்து,
பெல்ஜியம், பல்கேரியா, லக்ஸ்சம்பேர்க், இங்கிலாந்து, எதியோப்பியா, ஈரான், கென்யா, லைபீரியா, லிபியா, மஸிடோனியா, மொராக்கோ ஆகிய நாடுகளின் தேசிய விலங்கு சிங்கம் ஆகும்.1972ம் ஆண்டுவரை இந்தியாவின் தேசிய விலங்கினமாக சிங்கம் விளங்கியது.
து.வெங்கடேஷ்
மாவட்ட வன அலுவலர்
கோயம்புத்தூர்




