உலகத்தில் ஏற்பட்டிருக்கும் சூழல் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும், அதனால் ஏற்படும் சவால்களை உலகம் எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது. ஆகவே இயற்கையை நாம் பாதுகாத்தால், இயற்கை நம்மைப் பாதுகாக்கும் என்கிற நோக்கில் இந்நாள் கொண்டாடப்படுகிறது.,
உலகிலுள்ள இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கில் பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்பு சங்கம் 1948-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இயற்கையை நாம் பாதுகாத்தால் தான், இயற்கை நம்மைப் பாதுகாக்கும் என்கிற நோக்கில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 28 ஆம் நாள் உலக இயற்கை வளங்கள் பாதுகாப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது.தற்போதைய சூழலில் இயற்கை வளங்களை பாதுகாப்பதன் அவசியம் குறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு.
ஆதிகாலம் முதலே மனிதனின் வாழ்க்கையானது இயற்கையை சார்ந்தே உள்ளது, காடுகளுக்கு நடுவில் இயற்கையான சூழலில் மனிதர்கள் வாழ்ந்த நிலை மாறி தற்போது இயற்கையை விட்டு வெகு தூரம் விலகி நகரங்களில் பல்வேறு மாசுகளுக்கு இடையே மனிதர்கள் வாழும் நிலை உருவாகி உள்ளது. இதற்கு காரணம்,
மனிதர்களின் பேராசையால் இயற்கை வளங்கள் அழிக்கப்பட்டு, பிற உயிரினங்கள் யாவும் பாதிப்படைந்து வருகின்றன. நீர், நிலம், ஆகாயம், வாயு என நான்கு பூதங்களும் மாசடைந்துவிட்டன. சீக்கிரமே, வாழ முடியாத இடமாக பூமி ஆகிவிடுமோ என்ற நிலை உருவாகி வருகிறது. வனங்கள் அழிந்து, நதிகள் வறண்டு, மலைகள் மறைந்து, கடல் நீர் உயர்ந்துபோன நிலையில், இனி எத்தனை தலைமுறைகள் இந்த பூமியைப் பார்க்குமோ என்ற கவலை எல்லோருக்கும் இருந்துகொண்டே இருக்கிறது. உயிர்களின் வளர்ச்சிக்குத் தேவையான எல்லாவற்றையும் இயற்கை தருகிறது. காடுகள், நுண்ணியிரிகள், ஆறுகள், ஏரிகள், கடற்பகுதிகள், மலைகள், மண் வளம், மேகங்கள், ஏன் ஒவ்வொரு மழைத்துளியும்கூட இயற்கையின் கொடைதான். இதில், ஒன்றை இழந்துகூட மனிதர்கள் வாழவே முடியாது. வாழ அவசியமான எல்லாவற்றையும் அழித்துவிட்டு யாரோடு, எதனோடு வாழப்போகிறார்களோ தெரியவில்லை.
அடுத்த 12 ஆண்டுகளுக்குள் இருக்கின்ற இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டிய கட்டாயத்தில் அனைத்து உலக நாடுகளும் இருப்பதாக எச்சரிக்கும் இயற்கை ஆர்வலர்கள், இயற்கை வளங்களை மேம்படுத்தும் திட்டங்களில் மத்திய மாநில அரசுகள் கவனம் செலுத்த வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர்.
இயற்கையை நேசிப்பது மட்டுமல்ல, அதைப் பாதுகாப்பதும் அவசியம். இது கடமை மட்டுமல்ல, பொறுப்பும்கூட. உங்கள் தலைமுறைக்கு சொத்து சேர்ப்பதைப்போல, இயற்கையையும் பாதுகாத்து சேர்த்துவையுங்கள். இயற்கை வளங்களின் இன்றியமையாமைகுறித்து மக்களிடையே விழிப்பு உணர்வை உண்டாக்க, ஒவ்வோர் ஆண்டும் ஜூலை 28-ம் நாள் உலக இயற்கை வளப் பாதுகாப்பு நாள் கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில், இயற்கையைப் பாதுகாக்க நம்மால் ஆனதைச் செய்வோம். அதுவே, இந்த நாளுக்கான நமது மரியாதை என்று சொல்லலாம். என்ன செய்யப்போகிறோம் சொல்லுங்கள்இயற்கையான சூழலில் வாழ இயற்கை வளங்களை பாதுகாப்பதில் ஒவ்வொரு குடிமகனும் கவனம் செலுத்த வேண்டும் என்பதே இயற்கை நமக்கு எடுத்து கூறும் நியதி.