சென்னை அசோக்நகரைச் சேர்ந்தவர் நடிகர் இளங்கோ குமரவேல். இவர், ‘அபியும் நானும்’, ‘மாயன்’ போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். திரைப்பட பணிகள் தொடர்பாக சென்னை எம்.ஆர்.சி.நகரில் உள்ள தனியார் விடுதிக்கு இளங்கோ குமரவேல் சென்றிருந்தார்.
பின்னர் பட்டினபாக்கம் பகுதியில் செல்போனில் பேசியபடி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர், நடிகர் இளங்கோ குமரவேலின் செல்போனை மின்னல் வேகத்தில் பறித்து சென்று விட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பட்டினபாக்கம் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகள் அடிப்படையில் செல்போன் பறித்த நபர்களை அடையாளம் கண்டு தேடி வந்தனர். இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.