பல பெண்களை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்த நாகர்கோவில் காசி வழக்கில் 3-வது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தைப்போன்று தமிழகத்தை உலுக்கியது நாகா்கோவில் காசியின் பாலியல் வழக்கு. கல்லூரி மாணவிகள், தனியார் நிறுவனங்களில் வேலை பார்க்கும் இளம் பெண்கள், வசதியான குடும்ப பெண்கள் என 90-க்கும் மேற்பட்ட பெண்களிடம் முகநூல், இன்ஸ்டாகிராம் மூலம் தொடா்பு ஏற்படுத்தி அவா்களிடம் நெருங்கி பழகி அதை வீடியோ எடுத்து மிரட்டி அந்த பெண்களிடம் இருந்து லட்ச கணக்கில் பணத்தை கறந்து சொகுசு வாழ்க்கை வாழ்த்து வந்தான் காசி.
காசியால் பாதிக்கபட்ட பெண்கள் யாரும் புகார் தர முன் வராத நிலையில் சென்னையை சோ்ந்த பெண் மருத்துவா் கடந்த மார்ச் மாதம் நாகா்கோவில் எஸ்.பி ஸ்ரீநாத்க்கு மெயில் மூலம் புகார் கொடுத்தார். பின்னா் 24-ஆம் தேதி காசி கைது செய்யப்பட்டு அவனிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்ஃபோன் மற்றும் ஹார்ட்டிஸ்க்கில் அவனால் சீரழிக்கபட்ட பெண்களின் ஆபாச வீடியோக்கள், படங்கள் இருந்தன.
இதையடுத்து தீவிரமடைந்தது அந்த வழக்கு. பின்னா் மேலும் 5 பெண்கள் காசி மீது புகார் கொடுத்தனா். காசியின் வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. இதையடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் காசி மீது 7வது வழக்கைப் பதிவு செய்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வரும் நிலையில் நாகர்கோவில் குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று சிபிசிஐடி போலீசார் 3-வது குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்து இருக்கின்றனர்.‘