நடிகர் ரஜினிகாந்தின் ஆன்மீக அரசியல் மதத்தை பொறுத்தது அல்ல,மனதை பொறுத்தது என்று ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர் ஜெயகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார்.

சென்னை :
நடிகர் ரஜினிகாந்த் வருகிற ஜனவரி மாதம் கட்சி தொடங்கப்போவதாகவும் அதுகுறித்த அறிவிப்பை டிசம்பர் 31 ம் தேதி வெளியிடப்போவதாகவும் அறிவித்துள்ளார்.அதனை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் ‘மக்கள் சேவை கட்சி’ என்ற பெயரில் புதிய கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.மேலும் மக்கள் சேவை கட்சிக்கு பாபா முத்திரை சின்னத்தை கேட்டதாகவும்,அதற்கு தேர்தல் ஆணையம் மறுத்து ஆட்டோ வழங்கியதாகவும் தெரியவந்துள்ளது.
இந்தநிலையில்,காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட ரஜினி மக்கள் மன்ற செயலாளர் ஜெயகிருஷ்ணன்,தனது JK அறக்கட்டளையின் மூலம் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பள்ளிக்குழந்தைகள் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு தொடர்ந்து பல்வேறு நலத்திட்டங்களை செய்துவருகிறார்.மேலும் ஜெயகிருஷ்ணன் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் இணைந்து நீர்நிலைகளை சுத்தம் செய்தல்,அன்றாடவாசிகளுக்கு மதிய உணவு வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறார்.

கடந்த டிசம்பர் 12ம் தேதி நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாள் அன்று,முதியோர் இல்லங்களில் அன்னதானம்,பள்ளிக்குழந்தைகளுக்கு இலவச நோட்டு புத்தகங்கள்,மரம் நடுதல் போன்றவைகளை ஜெயகிருஷ்ணன் தலைமை தாங்கி செயல்படுத்தினார்.அதன் பிறகு செய்தியாளர்களை அவர் சந்தித்தபோது,நடிகர் ரஜினிகாந்தின் ஆன்மிக அரசியல் இங்கு தவறுதலாக புரிந்துகொள்ளப்பட்டு பரப்பப்பட்டு வருகிறது.ஆன்மீக அரசியல் என்பது மதத்தை பொறுத்தது அல்ல,அது மனதை பொறுத்தது என்று தெரிவித்தார்.மேலும் அவர் ரஜினிகாந்தின் இந்த அரசியல் கட்சி தமிழகத்தில் மிக பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி பொதுமக்களுக்கு தேவையான திட்டங்களை நிறைவேற்றி தரும் என்றார்.
Read more – நடிகர் ரஜினிகாந்தின் புதிய கட்சியின் பெயர்: மக்கள் சேவை கட்சியா ?
அதனை தொடர்ந்து,தேர்தலில் போட்டியிடுவது உள்ளிட்ட தகவல்களை கட்சியின் தலைமை முடிவு செய்து வெளியிடப்படும்,ஆனால் அதில் கண்டிப்பாக ரஜினி மக்கள் மன்றத்தின் கருத்துகள் முன்வைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.




