தமிழக கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் மனைவியின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட உறவினர் ஒருவருக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தன்னை ஒருவாரம் தனிமைப்படுத்தி கொள்வதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தமிழக கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியனின் மனைவி கலைச்செல்வி, நெஞ்சுவலி காரணமாக கடந்த 28-ஆம் தேதி உயிரிழந்தார். அமைச்சர் ஓ.எஸ்.மணியனின் மனைவி கலைச்செல்வியின் இறுதிச் சடங்கு, கடந்த வெள்ளிக்கிழமை அவரது சொந்த ஊரான நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த ஓரடியம்புலத்தில் நடைபெற்றது.
இந்நிலையில், ஓ.எஸ்.மணியனின் மனைவி கலைச்செல்வியின், இறுதிச் சடங்கில் பங்கேற்ற அமைச்சரின் உறவினர் ஒருவருக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே அமைச்சர் ஓ. எஸ். மணியன், தன்னை ஒருவாரக் காலம் தனிமைப்படுத்திக் கொள்வதாக தெரிவித்துள்ளார். இறுதி ஊர்வலத்தில் பல அமைச்சர்களும் கலந்துகொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.