அ.தி.மு.கவின் அவைத் தலைவர் பதவியில் நானே நீடிப்பேன், அதில் எந்த மாற்றமும் இல்லை என்று மதுசூதனன் விளக்கம் அளித்துள்ளார்.

அ.தி.மு.கவின் அவைத் தலைவர் பதவியில் நானே நீடிப்பேன், அதில் எந்த மாற்றமும் இல்லை என்று மதுசூதனன் விளக்கம் அளித்துள்ளார்.
செய்தி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அவர், அ.தி.மு.கவின் அவைத் தலைவர் பதவியில் நானே நீடிப்பேன்; எந்த மாற்றமும் இல்லை. அ.தி.மு.கவின் பொதுக் குழு கூட்டத்தை கூட்டுவது குறித்து இதுவரை முடிவு எடுக்கப்படவில்லை.
அ.தி.மு.கவின் அவைத் தலைவர் பதவி எனக்கு ஜெயலலிதா கொடுத்தது, நான் இருக்கும் வரை அ.தி.மு.க அவைத் தலைவரகவே இருப்பேன் என்று மதுசூதனன் விளக்கம் அளித்துள்ளார்.
உடல்நிலை காரணமாக அதிமுக அவைத் தலைவர் மாற்றப்பட உள்ளதாக செய்திகள் வெளியான நிலையில், மதுசூதனன் இந்த விளக்கத்தை அளித்துள்ளார். மேலும் அவர் பேசுகையில், என்னை அவைத் தலைவராக தேர்வு செய்யும் போது, பண்ருட்டி ராமச்சந்திரன், பொன்னையன் ஆகியோர் போட்டியில் இருந்தனர். பல்வேறு விஷயங்கள் குறித்தும் முதல்வரும் துணை முதல்வரும் ஆலோசனை செய்து வருகிறார்கள் என்றும் அவர் கூறினார்.




