மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், பொது இடத்தில் மாஸ்க் போடாமல் சென்றதற்காக அவர் மீது வழக்குபதிவு செய்ய வேண்டும் என டிராபிக் ராமசாமி காவல் துறையில் புகார் அளித்திருக்கிறார்.

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகித உள் ஒதுக்கீடு மசோதாவிற்கு ஒப்புதல் அளித்ததற்காக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆளுநரை சந்தித்து நன்றி தெரிவித்தார். அவருடன் சென்றிருந்த அமைச்சர் ஜெயக்குமார், செய்தியாளர்கள் சந்திப்பின்போது மாஸ்க் அணியாமல் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.
இதை தொலைக்காட்சிகளில் பார்த்த சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி, பொதுஇடத்தில் மாஸ்க் அணியாமல் இருந்த ஜெயக்குமார் மீது 24 மணி நேரத்தில் வழக்குபதிவு செய்ய வேண்டும் என்று மாநகர காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு புகார் அனுப்பியுள்ளார். அந்தபுகாரை கிண்டி காவல் நிலையத்திற்கு உள்ளது காவல்துறை கட்டுப்பாட்டு அறை. மேல் அதிகாரிகள் உத்தரவிட்டால், அமைச்சர் ஜெயக்குமார் மீது ஐபிசி 188, 269 ஆகிய பிரிவுகளில் கிண்டி காவல் துறை அவர் மேல் வழக்கு பதிவு செய்யலாம் கொஞ்ச நாள் பொறுத்து பார்ப்போம் இந்த சட்டம் எல்லாம் சாமானியனுக்கு மட்டுமா இல்லை அமைச்சர் களுக்கும் பொருந்துமா என.