அமமுக பொருளாளர் வெற்றிவேல் இன்று கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார்.
முதன்முதலில் காங்கிரஸ் கட்சியிலிருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கிய வெற்றிவேல் பின்பு அதிமுக கட்சியில் இணைந்தார் 2011 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆர் கே நகர் தொகுதியின் MLA ஆனார். 2014 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் சிறையிலிருந்து வெளிவந்த போது அவருக்காக தனது பதவியை ராஜினாமா செய்தார் அந்த இடைத்தேர்தலில் ஜெயலலிதா மிகப்பெரிய வெற்றி அடைந்தார். 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பெரம்பூர் தொகுதியில் வெற்றி பெற்றார்.
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு கட்சி பிளவுபட்ட போது அ ம மு க கட்சியில் இணைந்தார். ஆர்கே நகர் இடைத்தேர்தலின் போது ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த வீடீயோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். டி டி வி தினகரனின் நம்பிக்கைக்குரிய இவர் அமமுக கட்சியின் பொருளாளர் ஆனார்.