ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்கான தடை தொடரும் என சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை வரவேற்று விஜய்காந்த்பின்வருமாறு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுவட்டாரப்பகுதிகளில் உள்ள நிலத்தடி நீர் மாசு அடைந்ததோடு, அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு பல விதமாக உடல் நலக்குறைவுகளும் ஏற்பட்டுள்ளது.
இதனால் மக்களின் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டதோடு வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற மிகப்பெரிய போராட்டத்திற்கு தேமுதிக ஆதரவு தெரிவித்ததோடு, தேமுதிக சார்பில் கழக பொருளாளர் திருமதி பிரேமலதா விஜயகாந்த் மற்றும் தொண்டர்களுடன் போராட்ட களத்திற்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்து கைதாகினர்.
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டு உயிரிழந்த 13 பேரின் வீர மரணத்திற்கு கிடைத்த நீதியாக தான் இந்த தீர்ப்பை பார்க்கிறேன்.
மேலும், எந்த ஒரு திட்டமாக இருந்தாலும் அது மக்களால் வரவேற்கக்கூடிய வகையிலும், மக்களால் பாராட்டக் கூடிய வகையிலும், இருந்தால் தான் அந்த திட்டம் வெற்றியடைய முடியும். ஸ்டெர்லைட் ஆலையையை மீண்டும் திறப்பதற்கு தடை தொடரும் என சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை தேமுதிக சார்பில் வரவேற்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.