தமிழகத்தில் 5 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு

சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை: திருவள்ளூர், வேலூர், நீலகிரி, கோவை, தேனி ஆகிய மாவட்டங்களில் மிகக் கனமழை பெய்யக்கூடும். காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், சேலம், தர்மபுரி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.