
பரப்பான சாலையில் இரு மாணவிகள் முடியை பிடித்து கடுமையாக மோதிக் கொண்டது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
சென்னை அண்ணாநகர் பகுதியிலுள்ள ரவுண்டானா பேருந்து நிறுத்தத்திற்கு கல்லூரி மாணவிகள் சிலர் நின்றுகொண்டிருந்தனர். அந்த கூட்டத்தில் முதலாமாண்டு படிக்கும் மாணவி ஒருவருடன் மற்றொரு மாணவி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். சிறிது நேரத்தில் இருவருக்குமிடையில் வார்த்தை போர் அதிகமாகி தாக்க தொடங்கினர்.
ஒருவரையொருவர் முடியை பிடித்து சண்டை போட்டுக் கொண்டதால் அந்த பகுதி முழுவதும் பரபரப்பானது. காதலுடன் ஏன் பேசுகிறாய், பேசக்கூடாது என்று பேசி மாணவிகள் சண்டையிட்டுக் கொண்டனர். இந்த சம்பவத்தை ஒரு சிலிர் வீடியோ எடுத்துள்ளனர். அது தற்போது சமூகவலைதளங்களில் வைர்லாகியுள்ளது.
இதேபோன்று கடந்த டிசம்பர் மாதம் ஆவடி பேருந்து நிலையத்தில் பள்ளி மாணவிகள் இரு தரப்பினரும் மோதிக் கொண்டனர். அந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து கல்லூரி மாணவிகளிடையே ஏற்பட்டுள்ள இந்த அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




