சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் கொரோனாக் காலத்தில் இதுவரை 4,467 பிரசவங்கள் பார்க்கப்பட்டுள்ளன.
கொரோனா காலத்தில் பல தனியார் மருத்துவமனைகள் கர்ப்பிணிகள் மட்டுமின்றி புறநோயாளிகளுக்கு கூட சிகிச்சை அளிக்க தயங்கிய நிலையில் சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் 4,467 பிரசவங்கள் பார்க்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து மருத்துவமனை ‘டீன்’ டாக்டர் வசந்தாமணி கூறியதாவது:-
கடந்த மார்ச் மாதத்தில் 432 பேருக்கு பிரசவம் பார்க்கப்பட்டுள்ளது அதில் ஒருவருக்கு கூட கொரோனா இல்லை. ஏப்ரல் மாதத்தில் 602 பேரில் இரண்டு பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. மே மாதத்தில் பார்க்கப்பட்ட 649 பிரசவத்தில் 31 பேருக்கு கொரோனா இருந்தது. ஜூன் மாதத்தில் 684 கர்ப்பிணிகளின் 78 பேர் கொரோனா நோயாளிகள். ஜூலை மாதத்தில் 642 கர்ப்பிணிகளின் 62 பேருக்கு கொரோனா இருந்தது. ஆகஸ்ட் மாதத்தில் பார்க்கப்பட்ட 659 பிரசவங்களில் 72 பேருக்கு கொரோனா இருந்தது. செப்டம்பர் மாதத்தில் அதிகபட்சமாக 800 பேரில் 60 பேருக்கு கொரோனா இருந்தது. மேலும் செப்டம்பர் 29-ந்தேதி மட்டும் 40 பேருக்கு குழந்தை பிறந்தது. அந்தவகையில் 305 கொரோனா நோயாளிகளுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாமல் குழந்தை பிறந்து நலமுடன் உள்ளனர். தற்போது மருத்துவமனையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 22 கர்ப்பிணி பெண்கள் சிகிச்சைபெற்றுவருகின்றனர். கொரோனா உறுதி செய்யப்படும் கர்ப்பிணி பெண்களுக்கு தனியாக வார்டுகள் அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு பிரசவம் பார்க்கப்படுகிறது.