குழந்தைகளின் முழுமையான பாதுகாப்பை உறுதி செய்ய அனைவரும் ஒன்றிணைவோம் என்ற உறுதிமொழியைப் பின்பற்றி பொதுமக்கள் யாவரும் பயனடைய சென்னை காவல்துறை விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டுள்ளது .
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ்குமார் அகர்வால் அவர்களின் உத்தரவின்படி, சமூக பாதுகாப்புத் துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, அவர்களுடன் இணைந்து பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றத்தடுப்பு பிரிவு, குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை அம்மா ரோந்து வாகனம் மற்றும் ஆட்டோக்கள் மூலம் காவல் துணை ஆணையாளர் அலுவலகம், ஆயிரம் விளக்கு, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், தண்டையார்பேட்டை, டெய்லர்ஸ் சாலை, சமூக பாதுகாப்பு அலுவலகம் முதலிய இடங்களில் 35 அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர்களால் AMMA PINK PETROL மூலமாக குழந்தைகள் பாதுகாப்பு சம்மந்தமாக பொது தகவல் தொடர்பு சாதனம் மூலம் விழிப்புணர்வு நடத்தப்பட்டது. இந்த விழிப்புணர்வில் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக இணைவோம் என்ற நோக்கத்தோடு கீழ்க்கண்ட அறிவுரைகள் அறிவுறுத்தப்பட்டது.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான சிறப்புப்பிரிவானது பெண்கள் மற்றும் குழந்தைகளின் பிரச்சனைகளை சிறப்பு கண்ணோட்டத்தில் கையாளுவதற்காகவே உருவாக்கப்பட்ட சிறப்பு பிரிவாகும்.
குழந்தைகளுக்கான பிரச்சனைகளுக்கென அவசர உதவி எண் 1098 தொடர்பு கொள்ளவும்.
பெண்களுக்கான அவசர பிரச்சனைகளுக்கு 1091 என்ற எண்னை தொடர்பு கொள்ளவும்.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான CONTROL ROOM எண் 9150250665.
குழந்தைகளின் பிரச்சனைகளை உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும்.
குழந்தைகளின் பிரச்சனைகளை ஒருபோதும் பொறுத்துக்கொள்ளக் கூடாது. உடனடியாக புகார்தர வேண்டும்.
குழந்தைகளுக்கான குற்றங்களைத் தடுக்க தனிக்கவனம் செலுத்தி அனைத்து மகளிர் காவல் நிலையங்களில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
AMMA PATROL VEHICLE மூலம் பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி, குழந்தைகள் பாதுகாப்புடன் இருக்கவும் குழந்தைகளுக்கு எவ்வித குற்றங்கள் நடவாமல் தடுக்கவும் எந்தநேரத்திலும் தயாராக உள்ளோம்.
குழந்தைகள் பிரச்சனையை சாதாரணமாக எடுத்துக்கொள்ளாமல் உடனே புகார் அளிக்கவேண்டும்.