வீட்டு வேலைக்கு ஆட்களை அனுப்புவதாக ஆன்லைனில் பணம் பறித்த நபர் கைது
சென்னை நீலாங்கரை¸ வெட்டுவாங்கேணி பகுதியை சேர்ந்த அசோக் ராஜ் என்பவர் இணையவழி குற்றங்களை கண்டறியும் சிறப்பு மையத்தில் 03.08.2020-ம் தேதியன்று புகார் மனு கொடுத்திருந்தார்.
புகாரில் தனது வீட்டு வேலைகளை கவனிப்பதற்காக ஆட்கள் தேடி கொண்டிருந்தபோது ஆன்லைன் விளம்பரத்தை பார்த்து முன்பணம் ரூ.4000 செலுத்தியிருக்கிறார். ஆனால் வேலைக்கு ஆட்களை அனுப்பவில்லை என புகார் தெரிவித்திருந்தார். அதனடிபடையில் அடையாறு இணையவழி குற்றப்பிரிவு போலீசாரின் உதவியால் ஆட்கள் பணியமர்த்தும் பெயரில் மோசடி செய்த சைதாப்பேட்டையை சேர்ந்த பால்கிஸ் (எ) அமுல் என்பவர் வீட்டு வேலைக்கு ஆட்கள் அனுப்புவதாக கூறி மோசடி செய்திருப்பது தெரியவந்ததையடுத்து 04.08.2020-ம் தேதியன்று மோசடி நபரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டார். சென்னை காவல் ஆணையாளர் பொதுமக்களின் வசதிக்காக சென்னையில் 12 காவல் மாவட்டங்களிலும் இணையவழி குற்றங்களை கண்டறியும் அமைப்பை உருவாக்கியதன் பலனாக இந்த குற்றம் உடனடியாக கண்டறியப்பட்டது.