சென்னை ராயப்பேட்டை நியூ காலேஜ் அருகில் மிகவும் பழமையான ஒரு ஐந்து மாடிக் கட்டடம் இருந்தது. இந்தக் கட்டிடம் தொடா்பான வழக்கு நீதி மன்றத்தில் நிலுவையில் உள்ளது. அதனால் காவலாளி ஒருவா் மட்டும் அந்தக் கட்டிடம் அமைந்துள்ள வளாகத்தில் தங்கியுள்ளாா்.
இந்நிலையில் நேற்று இரவு சுமார் 8.30 மணியளவில் அந்த 5 மாடிக் கட்டடம் திடீரென இடிந்து விழுந்தது. இதனால் அருகில் இருந்தவா்கள் அதிா்ச்சியடைந்தனா். இதனைத் தொடா்ந்து தீயணைப்புப் படையினருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தேனாம்பேட்டை, திருவல்லிக்கேணி உள்பட பல்வேறு பகுதிகளிலிருந்து தீயணைப்பு வீரா்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனா்.
கட்டிடம் இடிந்து விழுந்தபோது அந்தப் பகுதியில் யாரும் இல்லாததால் எந்த இழப்பும் ஏற்படவில்லை. என அந்தப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு சரக்கு வாகனம் பலத்த சேதமடைந்தது. இது குறித்து ராயப்பேட்டை போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.