6 சவரன் வரையிலான கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் வாங்கிய நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
சென்னை :
எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் இன்று 110-வது விதியின் கீழ் 2 அறிக்கைகளை வெளியிட்டார். அதில், கொரோனா தொற்று காலத்தில் குடும்ப நிதி நெருக்கடியை சமாளிக்க முடியாமல் ஏழை எளிய மக்கள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் கூட்டுறவு வங்கியில் தாங்கள் பெற்ற நகைக்கடனை திரும்ப வழங்குவதில் பெரும் சிரமத்தை சந்தித்துள்ளனர்.
இதனால், கூட்டுறவு சங்கங்களில் நகைக்கடன் பெற்று திரும்ப செலுத்துவதில் சிரமத்திற்குள்ளான ஏழை எளிய மக்களை மீட்டெடுக்கும் முயற்சியாக கூட்டுறவு வங்கியில் 6 பவுன் வரை அடகு வைத்து பெற்ற நகைக் கடன்களை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.
Read more – தமிழகத்தில் ஏப்ரல் 6 ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் : தலைமை தேர்தல் ஆணையர் அறிவிப்பு
மேலும், பெண்களில் சுய முன்னேற்றத்திற்காக தொடங்கப்பட்ட சுயஉதவி குழுக்கள் பெற்ற கடனும் தள்ளுபடி செய்யப்படும் என்ற உத்தரவையும் பிறப்பித்தார்.