மதுரைக்கு முல்லை பெரியாறு அணையில் இருந்து குடிநீர் கொண்டு வரும் திட்டத்திற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.
மதுரை:
மதுரை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக அம்ரூத் திட்டத்தின் கீழ் சுமார் ரூ.1,296 கோடி மதிப்பிலான குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது.இதற்காக டெண்டர்கள் பணிகள் ஒதுக்கப்பட்டு வந்தது.இந்த திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா மதுரை கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி முல்லை பெரியாறு குடிநீர் திட்டத்திற்காக அடிக்கல் நாட்டினார்.
அந்த நிகழ்ச்சியின் போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது :முல்லைப் பெரியாறு அணையில் இருந்து மதுரைக்கு குடிநீர் விநியோக திட்டம் 2023 ம் ஆண்டுக்குள் நிறைவு பெறும். இந்த புதிய திட்டத்தால் மதுரையில் 1.10 லட்சம் கூடுதல் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு மதுரை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் என்றார்.மேலும் அவர் மதுரையில் எய்ம்ஸ் கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கும்.அதற்கான வேலைகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, வேலுமணி,ஆர்.பி. உதயகுமார், திண்டுக்கல் சீனிவாசன், ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டனர்.