கோயில் திருவிழாவை முன்னிட்டு அமைக்கப்பட்டு வந்த பந்தல் சரிந்து இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் கிராம மக்களை மிகவும் சோகமடையச் செய்துள்ளது.
புதுச்சேரியிலுள்ள ஸ்ரீ காமாட்சி அம்மன் கோயில் வரும் ஏப்ரல் 16-ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பிட்ட பகுதியில் நடக்கும் பிரசித்திப் பெற்ற திருவிழா என்பதால், ஆயிரக்கணக்கான மக்கள் கூடுவது வழக்கம்.
அதை கருத்தில் கொண்டு கோயில் வளாகத்தில் பந்தல் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இன்று காலை திடீரென பந்தல் சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் 4 பேர் படுகாயமடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு புதுச்சேரி திலாஸ்பேட்டை மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர்.
அதில் சிகிச்சை பலனின்றி வேலு (33) மற்றும் சீர்காழியைச் சேர்ந்த ஆறுமுகம் (65) இருவரும் அடுத்தடுத்து மரணமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.