தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது. ஆனால் தமிழக அரசு கட்டுக்குள் இருப்பதாகவும் விரைவில் நாம் இயல்பு நிலைக்கு திரும்புவோம் என்று தெரிவித்த வண்ணம் உள்ளது.

தற்போது தளர்வுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருவதால் கொரோனா அச்சம் இல்லாமல் மக்கள் வெளியேசுலபமாக சென்று வருகின்றனர். அதேபோல, இ பாஸ் முறையிலும் தற்போது தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. மற்றும் சென்னையில் டாஸ்மாக் கடைகள் கூட திறக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் தமிழகத்தின் இன்றைய பாதிப்பு விவரங்களை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் மேலும் 5,975 பேருக்கு கொரோனா உறுதியானதால் மொத்த பாதிப்பு, 3,79,385 ஆக அதிகரித்துள்ளது கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 3,19,327ஆக உள்ளதாக தமிழகஅரசுதெரிவித்துள்ளது.
இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் முழுவதிலும் 97பேர் மரணமடைந்ததாகவும் 6,517 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளதாகவும் சென்னையில் தற்போது 1,298 பேருக்கு கொரோனா உறுதியாகி இருப்பதாகவும் இதனால் சென்னையில் பாதிப்பு 1.25 லட்சம் ஆக உயர்ந்து உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒரே நாளில் 70,127 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொண்டதாகவும் இதுவரை மொத்தம் 40,63,624 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழகத்தில் இதுவரை 6,517 பேர் மரணம் அடைந்ததாகவும் தற்போது சிகிச்சை பெறுவோரை விட அதிகம் பேர் குணமடைந்து இருப்பதாகவும் தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




