
இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா பரவல் அதிகரிக்க துவங்கி உள்ளது. இதன் காரணமாக மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தி இருக்கிறது.
இதையடுத்து தமிழ்நாட்டில் கொரோனா பரவல் வேகமெடுக்க தொடங்கியுள்ள நிலையில், நேற்று ஒரே நாளில் மட்டும் 300-க்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக தலைநகர் சென்னை, செங்கல்பட்டு, குமரி, ராணிப்பேட்டை, கோவை ஆகிய மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக கொரோனா அதிகரிக்கும் மாவட்டங்களில் கட்டுப்பாடுகளை தீவிரபடுத்த அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.