திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ., டி.ஆர்.பி. ராஜாவுக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும், கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்பும் குறைந்து வருகிறது.
தற்போது கொரோனா தொற்று பாதிப்பு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுவிட்டாலும், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், போன்றோர் கொரோனாவால் அதிகமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ., டி.ஆர்.பி. ராஜாவுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு அறிகுறிகள் இல்லாதக் காரணத்தாலும், உடல்நிலை சீராக இருப்பதாலும் அவர் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், அவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் கொரோனா தொற்று பரிசோதனை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.