தமிழகத்தில் இது வரை கொரோனா பாதிக்க பட்டவர்களின் எண்ணிக்கை 3, 32,105 ஆக உயர்வு

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா நோய் மிக தீவிரமாக பரவிக்கொண்டு இருக்கிறது இன்றைய கொரோனா நோய் பரவல் எண்ணிக்கையை பார்ப்போம்.சென்னையில் மட்டும் இன்று மேலும் 1,179 பேருக்கு கொரோனா நோய் தொற்று பாதிப்பு உள்ளது மொத்தம் சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,15,444 ஆக உயர்துள்ளது.
தமிழகத்தில் ஒரே நாளில் 5860 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது .இன்று ஒரேநாளில் மட்டும் 127 பேர் உயிரிழந்த நிலையில் பலி எண்ணிக்கை 5,641ஆக உயர்ந்துள்ளது. சற்று மகிழ்ச்சி அளிக்கும் விதமாக தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 5,236 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர், இதுவரை மொத்தம் 2,72,251பேர் குணமடைந்துள்ளனர்.




