12 கோடி ஆண்டுகள் முன்பிருந்த டைனோசர் முட்டைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது மக்களிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த உலகில் சுமார் 12 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த டைனோசர்களின் எலும்புக்கூடுகள் சமீபத்தில் வெளிநாட்டில் கோடிக்கணக்கில் விற்பனை ஆனது.
அத்தனை பெரிய உயிரினங்கள் இங்கு வாழ்ந்துள்ளன என்று நம்புவதற்கு ஆச்சர்யமாக இருந்தாலும் தொல்லியல் ஆய்வாளர்களின் கைகளில் சிக்கிய அதன் எலும்புகள், முட்டைகள் உண்மைதான் என்று உறுதி செய்கின்றன.
இந்நிலையில், தமிழகத்தில் டைனோசர்களின் முட்டைகள் அருகே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்டம் அருகேயுள்ள பெரிய ஏரியில் நேற்று மண் எடுத்துக்கொண்டிருந்த போது, அம்மோனைட் எனப்படும் கடல்வழ் நத்தைகளின் படிமங்கள் மற்றும் முட்டைகளும் கிடைத்தன.
இதையடுத்து அப்பகுதிக்கு வந்த புவியியல் ஆய்வாளர்கள் அங்குவந்து கிடைத்துள்ள படிமங்கள், மற்றும் முட்டைகள் போன்று காணப்பபடுபவைகளை ஆராய்ந்து,அது டைனோசர் முட்டையா எனப் பார்த்து இதைப் பார்த்து உறுதிப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.