திருப்பரங்குன்றம் தி. மு. க. MLA சரவணன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அதில் கொரோனா தடுப்பில் மாநில அரசின் நிர்வாக குளறுபடி மற்றும் மரணங்களை பதிவு செய்வதில் ஏற்பட்டுள்ள முறைகேடுகள் பற்றி தெரிவித்தார்.

அதில் இதுவரை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அரசுக்கு ஆக்கப்பூர்வமான பல்வேறு ஆலோசனைகளை வழங்கியதாக கூறினார்.
தமிழகம் கொரோனா தொற்றுப் பரவலில் மூன்றாம் கட்டத்தை எட்டிவிட்டது, இருப்பினும் இதுவரை இந்த பரவல் நிலையை மாநில அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்காமல் இருந்து வருகிறது, என்றார். ஊரடங்கு காலத்தில் மக்களை வீட்டில் முடக்கி வைத்திருந்தபோதே, சோதனைகளை அதிகரித்திருக்க வேண்டும், ஆனால் அரசு செய்யவில்லை, என்று குற்றம்சாட்டினார்.

கொரோனா பாதிப்புகளை கண்டறிய பி.சி.ஆர். பரிசாேதனைகளை மட்டுமின்றி ராபிட் சோதனைகளையும் சரியாக கையாள வேண்டும், என்று தெரிவித்தார்.

எதிர்க்கட்சி தலைவரின் ஆலோசனைப்படி, ஊடரங்கு காலத்தில் ஏழை எளிய மக்களுக்கு தலா 5000 ரூபாய் வழங்கியிருந்தால், மக்கள் வீட்டைவிட்டு
வெளியே செல்லாமல் இருந்திருப்பார்கள், என்று தெரிவித்தார்.
“ ஜூலை 27 அன்று தமிழகத்தில் 6993 புதிய தொற்றுகள் பதிவாகியுள்ளன. இதன் மூலம், மாநில கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,20,716 ஆக உயர்ந்துள்ளது. இவற்றில், சென்னையில் நேற்று மட்டும் 1494 புதிய பாதிப்புகளுடன், நகரின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 95,857 ஆக உயர்ந்துள்ளது”என்று அவர் கூறினார்.
சமீபத்தில் வெளியான 444 இறப்புகள் மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் ஆயிரணக்கான உயிரிழப்புகள் மறைக்கப்பட்டுள்ளதாக குற்றமச்சாட்டினார்.





